2026 தேர்தலில் திமுக வெற்றியைத் தடுக்க அதிமுக- நாம் தமிழர் கூட்டணிக்கு 'ஜரூரா'க களமிறங்கும் 'தலைகள்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களக் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையில் அதிமுக- நாம் தமிழர் கூட்டணி அமைய வேண்டும் என இப்போதே பத்திரிகையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் தூபம் போட தொடங்கிவிட்டனர். நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டு அதிக வாக்கு சதவீதம் பெற்றாலும் 2026-க்குப் பின்னர் அக்கட்சி காணாமல் போகும் அபாயம் உருவாகும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் அச்சுறுத்தல் கருத்தாக இருக்கிறது.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் அதிவேகமாக பயணிக்கத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி வலிமையாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. திமுக கூட்டணியிலேயே காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை நீடிக்கும். மதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் தற்போதைக்கு திமுக கூட்டணியில் நீடித்தாலும் 2026 தேர்தல் களத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்கிற அளவுக்குத்தான் அந்த கட்சிகளின் உள் நிகழ்வுகள் இருக்கின்றன.

tamilnadu assembly election 2026 aiadmk naam tamilar

அமையாத அதிமுக- பாஜக கூட்டணி: இன்னொரு பக்கம் முடிவடைந்த லோக்சபா தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தாக வேண்டும் என பத்திரிகையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் பலரும் முயற்சித்துப் பார்த்தனர். ஆனால் அதிமுக, பாஜக தனித் தனி கூட்டணி அமைத்தது. தமிழ்நாட்டில் எளிதாகவே திமுக கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றிவிட்டது.

நாம் தமிழருக்கு டபுள் டிஜிட் எம்.எல்.ஏக்கள்: ஆனால் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தாலும் இரு கட்சிகளுக்கும் பயனிருக்காது என்பதும் அதே அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் இப்போது கூறுகின்றனர். அதிமுகவும் தற்போதைக்கு 8 சதவீதம் வாக்கு வங்கி வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைத்தால் திமுக கூட்டணியின் வெற்றி வேகத்தைத் தடுக்க முடியும்; நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் வெகுவாகவே குறையும்; அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு டபுள் டிஜிட் எம்.எல்.ஏக்கள் கிடைத்தும் விடுவர்; இதனால் நாம் தமிழர் கட்சி அடுத்தடுத்து வலிமையான சக்தியாக உருவெடுக்கும் என்கின்றனர்.

நாம் தமிழர் - த.வெ.க. கூட்டணி: அதேநேரத்தில் நாம் தமிழர் கட்சியும் விஜயின் த.வெ.க.வும் கூட்டணி அமைத்தாலும் எந்த வகையிலும் இரு கட்சிகளுக்கும் பயன் தராது; இரு கட்சிகளும் மிக மோசமான தோல்வியைக் கூட- அதாவது பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை பறிகொடுக்கும் பரிதாபமான நிலைமை உருவாகும் என்பதும் பத்திரிகையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக முன்வைக்கப்படுகிறது.

திமுக கூட்டணிக்கு 200+ இடங்கள்: அதிமுக- நாம் தமிழர் கூட்டணி அமையாமல் போனால் அதாவது திமுக தலைமையிலான தற்போதைய கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. ஆகியவை தனித்தனியே களம் காணும் நிலை ஏற்பட்டாலோ அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தாலோ 2026 தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியால் எளிதாக 200-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றிவிட முடியும் என்கின்றனர் இந்த பத்திரிகையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள்.

கூட்டணி பாவச் செயல் அல்ல; மேலும், வாக்கு வங்கி அரசியலில் 'கூட்டணி' ஒரு பாவம் அல்ல; வாக்கு வங்கி அரசியலுக்கு வந்துவிட்டு கூட்டணியே அமைக்க மாட்டேன் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடம்பிடிப்பது ஆரோக்கியமானதும் அல்ல. வாக்கு வங்கி அரசியல் என்பது ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டை கூட்டணி கட்சிகளுடன் விளையாடியாக வேண்டும் என மீண்டும் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு போகும் வகையில் கருத்துகளை திணித்து வருகின்றனர் பத்திரிகையாளர்கள், அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+