சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திண்பண்டங்களை அடைக்கும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்க, விற்பனை செய்யவும் தமிழக அரசு அதிரடி தடை

Google Oneindia Tamil News

சென்னை: திண்பண்டங்களை அடைப்பதற்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு அதிரடி தடை விதித்திருக்கிறது.

Recommended Video

    குர்குரே மற்றும் லேஸ் பாக்கெட்டுக்களுக்கு தமிழக அரசு தடை

    தமிழகத்தில் மொத்தம் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2018-ம் ஆண்டு ஜூன் 25-ல் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2019-ம் ஆண்டு ஜனவர் 1-ந் தேதி முதல் அமலானது.

    TN bans plastic packaging of goods

    ஆனால் இதற்கு எதிராக பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூனில், தமிழக அரசின் தடை உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்தது.

    அத்துடன் விலக்கு அளிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக்குகளின் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. இதனால் தமிழக அரசின் முந்தைய அரசாணையில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

    78 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன78 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன

    இந்த திருத்தத்தின்படி, திண்பண்டங்கள்- நொறுக்கு தீனிகளை அடைத்து விற்பனை செய்ய பயன்படுத்துகிற பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும் விற்பனை செய்யும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5-ந் தேதியிட்ட அரசாணையில் இத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

    English summary
    The Tamil Nadu government has banned the biscuits and chips plastic covers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X