சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே.வங்கம் ஸ்டைலில் தமிழகத்திலும் மற்ற கட்சிகளில் இருந்து ஆட்களை இழுக்கும் பாஜக!

Google Oneindia Tamil News

சென்னை: மேற்கு வங்கத்தைப் போல தமிழகத்திலும் மற்ற கட்சிகளில் இருந்து நாங்களும் பிரமுகர்களை இழுக்கிறோம் என ஆறுதல் அடைந்து கொண்டிருக்கிறது தமிழக பாஜக.

தமிழகம், மேற்கு வங்கம் சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் அண்மையில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அமித்ஷாவின் மேற்கு வங்க பயணத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், சிபிஎம் கட்சி எம்.எல்.ஏக்கள் கனஜோராக பாஜகவுக்கு தாவினர். இதே பாணியை தமிழகத்திலும் அரங்கேற்ற பாஜக நீண்டகாலமாகவே முயற்சித்து கொண்டே இருக்கிறது.

பேராசிரியர் தொ.பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்: தமுஎகச வேண்டுகோள்பேராசிரியர் தொ.பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்: தமுஎகச வேண்டுகோள்

ஓரம்கட்டப்பட்ட தலைவர்கள்

ஓரம்கட்டப்பட்ட தலைவர்கள்

தமிழக பாஜக தலைவராக முருகன் நியமிக்கப்பட்ட போது திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜகவுக்கு போனார். பின்னர் வி.பி.துரைசாமி, கேபி ராமலிங்கம் என ஓரம்கட்டப்பட்ட திமுக தலைவர்களும் பாஜகவில் ஐக்கியமாகினர். இதற்குப் பின்னர் பெரிய அளவில் பிற கட்சிகளில் இருந்து பிரமுகர்களை பாஜகவால் இழுக்க முடியாமல் போனது.

பாஜகவில் இருந்து விலகல்

பாஜகவில் இருந்து விலகல்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் பாஜகவில் இருந்த பெரிய அளவில் அறியப்படாத அர்ஜுன மூர்த்தி, கட்சி மாறினார். பாஜகவுக்கு பலரும் தாவுவார்கள் என சொல்லப்பட்ட நிலையில் அந்த கட்சியைவிட்டு ரஜினி கட்சிக்கு ஒரு பிரமுகர் தாவினார்.

கமல் கட்சியில் இருந்து விலகல்

கமல் கட்சியில் இருந்து விலகல்

இதனிடையே நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்திருக்கிறார். அர்ஜுன மூர்த்தி, அருணாச்சலம் போன்றவர்கள் எல்லாம் அரசியலிலும் கட்சிகளிலும் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதே கட்சிகளைவிட்டு தாவுகிற போதுதான் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆறுதலடையும் தமிழக பாஜக

ஆறுதலடையும் தமிழக பாஜக

தற்போதைய நிலையில் தமிழக அரசியல் கட்சிகளில் இருந்து சிட்டிங் எம்.எல்.ஏக்கள், அறியப்பட்ட முகங்கள் எவரும் பாஜகவை நோக்கி நகருவதாக இல்லை. இந்த நிலையில் சிறிய அல்லது புதிய கட்சிகளில் இருந்து அருணாச்சலம் போன்றவர்களையாவது இழுத்து ஆறுதல் அடைந்து வருகிறது தமிழக பாஜக என்பதே நிதர்சனம்.

English summary
Tamilnadu BJP is attempting to poach Leaders from other political Parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X