இன்னும் 3 மாசம்தான்.. பாஜகவை திமுக நிச்சயம் புரிந்து கொள்ளும்.. அண்ணாமலை பெருத்த நம்பிக்கை
திமுக விரைவில் தன்னை மாற்றி கொள்ளும் என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை விரைவில் மத்திய அரசு குறைக்கும் என்றும் இன்னும் 3 மாதத்தில் வேளாண் சட்டங்களை, நீட் தேர்வை திமுக ஆதரிக்கும் நிலை வரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு சென்றிருந்தார்.
பிறகு, தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

பாஜக
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாஜக கட்சி அடிப்படையில் வளர்ந்து கொண்டிருக்கிறது.. இளைஞர்கள் படை நம் பக்கம் திரும்பி இருக்கிறது. இதற்கு காரணம் நம் கட்சிக்காக முன்னோர்கள், மூத்த நிர்வாகிகள் பிரதிபலன் பாராமல் உழைத்ததுதான்.. முன்னர் எதிர்கட்சியாக இருந்து விமர்சித்த திமுகவினர், இப்போது மத்திய அரசை புரிந்துக்கொண்டு ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

திமுக
திமுகவினர் கடந்த 10-ஆண்டு காலம் தூங்கி கொண்டு இருந்துவிட்டு, மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து ஏதேதோ பேசிவிட்டு இப்போது அவற்றை புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். மத்திய அரசின் வேளான் சட்டம், நீட் தேர்வு ஆகிய விஷயங்களில் அரசியல் செய்யாமல், தமிழக மக்களுக்கு முழுமனதுடன் எந்த விதத்திலும் விரோதமான திட்டங்களை மத்திய அரசு கொண்டுவரவில்லை என்பதை திமுகவினர் 3 மாதத்தில் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என நம்புகிறோம்.

அண்ணாமலை
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த முறைப்படி என்ன செய்யமுடியும் என்பதை பாராளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Recommended Video

நடவடிக்கை
அதன்படி, நிரந்தர தீர்வாக உள்நாட்டில் அசாம், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும்... மிக வேகமாக பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை பாஜக அரசு கட்டுக்குள் கொண்டு வரும்" என்றார்.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications