மததுவேஷம்.. தி.க.வின் திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை விதிக்க பாஜக வலியுறுத்தல்
சென்னை: திராவிடர் கழகத்தின் திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாடு நடந்தால் தமிழகத்தில் மததுவேஷம் பரப்பப்படும்; ஆகையால் திராவிடர் கழகத்தின் திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.

திராவிடர் கழகம் சார்பில் திருவாரூரில் கடந்த வாரம் சனாதன எதிர்ப்பு- திராவிடர் மாடல் விளக்கம் திறந்தவெளி மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இந்த மாநாட்டில் தி.க.தலைவர் கி. வீரமணி, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்தனர். ஆனால் கனமழையால் இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
திருவாரூரில் செப்டம்பர் 4-ந் தேதி மீண்டும் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திராவிடர் கழகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இம்மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: திருவாரூரில் செப்டம்பர் 4 அன்று சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்த போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.சனாதனம் என்பது ஹிந்து மதத்தையே குறிக்கிறது என்பது உலகறிந்த உண்மை. அதாவது ஹிந்து மதத்தையும், ஹிந்து மத நம்பிக்கைகளையும், ஹிந்து கடவுள்களையும் இழித்தும்,பழித்தும், பேசுவதற்காகவே இந்த மாநாடு என்பதும் இதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்க போவதாகவும் சொல்லப்படுகிறது.
"தமிழகத்தில் மத மோதல்களை ஏற்படுத்துவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இனியும் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். மத துவேஷங்களுக்கு தமிழ் மண்ணில் இடம் அளிக்க முடியாது.அப்படி முயலுவோர் சட்டத்தின் படி தண்டனையை அனுபவிக்கும் சூழலை இந்த அரசு உருவாக்கும்" என்று கடந்த மே மாதம் 10ம் தேதியன்று @CMOTamilnadu அவர்கள் தமிழக சட்டசபையில் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

அவர் கூறியது போல், வரும் 4ம் தேதி, திருவாரூரில் மத துவேஷத்தை பரப்பி,மத மோதல்களை உருவாக்க திராவிடர் கழகம் மற்றும் சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெளிவாக தெரிகிறது. சட்டசபையில் முதல்வர் @mkstalin சூளுரைத்தது போல்,மத உணர்வுகளை புண்படுத்த முற்படும் ஹிந்து மத எதிர்ப்பு மாநாட்டுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். தமிழக காவல்துறை இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications