சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்க மோட்டார் வாயால் தமிழகத்தில் ஏகப்பட்ட பிரச்சனை.. சு.சுவாமிக்கு பாஜக தொண்டர் அட்வைஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜகவில் மாற்றம் வேண்டும் என குரல் கொடுத்துள்ள அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜகவில் புதிய கமிட்டி அமைக்க வேண்டும்; 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட். இதற்கு ஆதரவும் எதிர்ப்புமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.

ஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்! பரபர பின்னணி!ஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்! பரபர பின்னணி!

பாஜகவுக்கு அட்வைஸ்

பாஜகவுக்கு அட்வைஸ்

பாஜக தொண்டர்கள் சிலர் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்டை வரவேற்றுள்ளனர். இன்னும் சிலர் தமிழகத்தின் மீதான பாஜகவின் வெறுப்பரசியல் கைவிடப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

முதல்வர் வேட்பாளர் சுவாமி

முதல்வர் வேட்பாளர் சுவாமி

நீங்கதான் பாஜகவின் முதல்வர் வேட்பாளரா? எனவும் ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. @gus_brf என்பவர் கொஞ்சம் காட்டமாகவே சுப்பிரமணியன் சுவாமிக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை 'பழி' தீர்த்த வசந்தகுமார்! கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை 'பழி' தீர்த்த வசந்தகுமார்!

மோட்டார் வாய் சு.சுவாமி

மோட்டார் வாய் சு.சுவாமி

அவர் தம்முடைய பதிலில், தயவு செய்து தமிழகத்தில் இருந்து விலகி இருங்க. உங்க மோட்டார்வாயால் ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளே போதும். அதுக்காகவே பாஜகவினர் போராடி வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

234 வேட்பாளர்களா?

234 வேட்பாளர்களா?

@sandig108 என்ற பதிவர், முதலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் இருக்கின்றனரா? தமிழகத்தில் மோடி அலை வேலைக்காது என கூறியுள்ளார். @raghuamblapuzha என்ற பதிவரோ, சுப்பிரமணியன் சுவாமியை முதல்வர் வேட்பாளராக்கினால்தான் தமிழக பாஜகவை உயிர்ப்பிக்க முடியும் என கூறியுள்ளார்.

English summary
Tamilnadu BJP Cadres said that Rajya Sabha MP Subramanian Swamy from the state politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X