மருதமலை முருகன் கோவிலும் திமுகவும்.. நான் “தெளிவாகத்தானே” பேசியிருக்கிறேன்.. அண்ணாமலை விளக்கம்!
சென்னை: மருதமலை முருகன் கோவில், திமுக தொடர்பாக தாம் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்திய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பேசியதாவது: 1962-ம் ஆண்டு மருதமலை முருகனை பார்க்க வேண்டும் என்றால் கரண்ட் கிடையாது. சாதாரண படிக்கட்டில் ஏறனும். திமுக, மருதமலை முருகனுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தது. அதை உடைத்து மருதமலை கோவிலுக்கு மின்சாரத்தை கொடுத்தது யாருன்னா சின்னப்ப தேவர். அவரே போய், முருகப் பெருமானுக்கு கரண்ட் ரெஜிஸ்டிரேசன் பீஸ் கட்டி, எம்ஜிஆரை பார்த்து மருதமலை முருகன் கோவிலுக்கு கரண்ட்டை தொடங்கி வைத்தார். திமுக எப்போதும் சனாதன தர்மத்துக்கும் இந்து தர்மத்துக்கும் எதிரானது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அண்ணாமலை பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டுதான் திமுக ஆட்சிக்கு வந்தது; 1962-ம் ஆண்டு மருதமலை முருகனுக்கு மின்சாரம் கொடுக்காததற்கு திமுக எப்படி காரணமாக இருக்க முடியும்? என சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பின. திமுக தரப்பில் அண்ணாமலைக்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. அத்துடன் மருதமலை முருகன் கோவிலில் பதிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகம் தொடர்பான கல்வெட்டு படங்களும் பகிரப்பட்டன.

தற்போது தமது பேச்சு குறித்து எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தந்துள்ளார் அண்ணாமலை. அதில், Generally i don't respond to garbage, but have decided to make an exception today & clean it up for once. திமுக விதித்திருந்த கட்டுப்பாட்டை மீறி, ஐயா சின்னப்ப தேவர் அவர்களின் கோரிக்கையை ஏற்று புரட்சித் தலைவர் திரு எம் ஜி ஆர் அவர்கள் மருதமலை முருகன் கோவிலில் வழங்கப்பட்ட மின்சாரத்தை துவக்கி வைக்க சென்றிருந்தார் என்று தெளிவாக பேசியுள்ளேன். வரலாற்றை மறைப்பதும் வரலாற்றை திரித்து பேசுவதும் திமுகாவுக்கும் அவர்களின் குடும்ப ஊடக நிறுவனங்களுக்கும் புதிதல்ல என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications