சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'வாசன் ஐ கேர்' குழுமத்தின் தலைவர் அருண் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்- பாஜக

Google Oneindia Tamil News

சென்னை: 'வாசன் ஐ கேர்' குழுமத்தின் தலைவர் அருண் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

வாசன் ஐ கேர் நிறுவனம் திருச்சியை மையமாக கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது 170-க்கும் மேற்பட்ட இடங்களில் வாசன் ஐ கேர் செயல்பட்டு வருகிறது.

TN BJP demands to probe on Vasan Eye Care Arun death

வாசன் ஐ கேர் நிறுவன தலைவர் அருண் திடீரென நேற்று மாரடைப்பால் காலமானார். ஏற்கனவே வருமான வரி சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனைகளில் அருணும் சிக்கியிருந்ததால் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

வாசன் ஐ கேர் குழும தலைவர் அருண் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த சென்னை போலீஸ் வாசன் ஐ கேர் குழும தலைவர் அருண் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த சென்னை போலீஸ்

சென்னை போலீசாரும் அருண் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாவது:

'வாசன் ஐ கேர்' குழுமத்தின் தலைவர் அவர்களின் மரணம் குறித்து விசாரணை தேவை என அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். தமிழக அரசு உடன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு நாராயணன் திருப்பதி பதிவிட்டிருக்கிறார்.

English summary
Tamilnadu BJP has demanded to probe the Vasan Eye Care Founder Arun death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X