மாறி மாறி.. படத்தை வாழ்த்திய அண்ணாமலை! பயணத்தை வாழ்த்திய நடிகர் சசிகுமார்!
சென்னை: சசிகுமார் நடித்து வெளியாகியிருந்த நந்தன் திரைப்படத்தை பார்த்த பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த திரைப்படம் சர்வாதிகார அரசியல்வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது என்று ட்வீட் பதிவிட்டுள்ளார். மேலும், நடிகர் சசிகுமாருக்கு பாராட்டும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு நன்றி சொல்லி நடிகர் சசிகுமார் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
சுப்பிரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் என பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சசிகுமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள "நந்தன்" திரைப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வந்தது. கிராம பஞ்சாயத்து தேர்தலில் ஏற்படும் சாதியக் கொடுமைகளை மையமாக கொண்டு இந்த படம் அமைந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஒடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது. சசிகுமாரின் நடிப்பும் இந்த படத்தில் பெரிதாக பேசப்பட்டது. சாதி ரீதியாகப் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் வலிகளைப் பேசும் படமாக நந்தன் அமைந்து இருப்பதாக நெட்டிசன்களும் பாராட்டி வருகிறார்கள். நந்தன் படத்தை பார்த்த திரையுலக நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில், லண்டனில் படிப்புக்காக சென்றுள்ள அண்ணாமலையும் நந்தன் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். அண்ணாமலை இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
OTT தளத்தில் 'நந்தன்’ திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் சசிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் திரு @erasaravanan அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த 'நந்தன்’ திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் எக்ஸ் தள ட்வீட்டுக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் சசிகுமார் ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், "பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி 'நந்தன்’ படத்தைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றிகள் சார்… உங்கள் பயணம் வெற்றிகரமாக அமையட்டும்" என்று சசிகுமார் பதிவிட்டுள்ளார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications