விவசாய சட்டத்துல கமாவை கூட மாத்த முடியாது-இது பாஜக ஆட்சின்னு கெத்து காட்டிய அண்ணாமலை வீடியோ வைரல்
சென்னை: மத்திய அரசின் விவசாய சட்டங்களை முழு வீச்சில் ஆதரித்து பேசிய பாஜக தலைவர்களின் வீடியோக்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாய சட்டத்தில் ஒரு கமாவை கூட மாத்த முடியாதுன்னு பேசிய வீடியோவும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் இதுவரை சுமார் 800 விவசாயிகள் பலியாகி உள்ளனர்.
ஆனாலும் மத்திய அரசு பாராமுகம் காட்டியே வந்தது. உச்சநீதிமன்றம்தான் தலையிட்டு இந்த விவசாய சட்டங்களை நிறுத்தி வைத்தது. தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடைவிடாமல் இந்த விவசாய சட்டங்களை ஆதரித்து பேசினர்.

விவசாய சட்டம் வாபஸ்
இந்த நிலையில்தான் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தில் மூன்று விவசாய சட்டங்களையும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அத்துடன் டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

பழைய பேச்சுகள் மீம்ஸ்
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் தமிழக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்களின் விவசாய சட்டங்களுக்கான ஆதரவு பேச்சுகள் இப்போது மீம்ஸ்களில் உருட்டப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது அறிக்கையில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. பரப்புரையில் ஈடுபட்டது. அந்தச் சட்டங்களில் என்ன தவறு இருக்கிறது என்று பத்திரிகையாளர்களை வாதத்திற்கு அழைத்தார் அன்றைய முதலமைச்சர் பழனிசாமி. பா.ஜ.க.வைவிட அதிகமாக அவர்தான் ஆதரித்தார். இவரை அழைத்துச் சென்று டெல்லியில் போராடி வரும் உழவர்களுக்கு விளக்கம் சொல்ல வைக்கலாமே என்று நான் அப்போது சொன்னேன். அந்தளவுக்கு அ.தி.மு.க. அந்தச் சட்டங்களை ஆதரிப்பதில் தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்ணாமலையின் கெத்து பேச்சு
இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெடு கெத்தாக விவசாய சட்டங்களை ஆதரித்து பேசினார். அவரது வீடியோ பேச்சுதான் இப்போது வைரலாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், நம்முடைய அரசு என்ன சொல்கிறது என்றால் 500 வருஷம் போராட்டம் பண்ணினாலும் இந்த சட்டத்தில் (விவசாய சட்டங்களின் நகல்களை கையில் எடுத்து காண்பித்தபடி) ஒரு கமாவை கூட மாத்தமாட்டோம். ஏனென்றால் இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது. இது பாஜகவின் ஆட்சி. யாருக்கும் பயப்படமாட்டோம். இது மக்களுக்காக கொண்டுவரப்பட்ட சட்டம். மக்களுக்கு நல்லது செய்யக் கூடிய சட்டம். என்னதான் நீங்க மிரட்டி உருட்டி ஷூட்டிங் நடத்தி பச்சை துண்டு போட்டாலும் எதுவும் செய்ய முடியாது என கூறியிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications