சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் தயக்கம் இல்லை- பாஜக தலைவர் எல். முருகன்
சென்னை: சமூக நீதிக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 142வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அதேபோல் பிரதமர் மோடியின் பிறந்த நாளை பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடுகின்றனர்.

மோடி பிறந்த நாள்
சென்னையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 70 அடி நீள கேக் வெட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்களுக்கு ஒரு கலாசாரம்
பிரதமர் மோடியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். நாங்கள் பிறருடைய கலாசாரம் எதனையும் மறைக்கவில்லை. எங்களுடைய கலாசாரத்தின்படியே செயல்படுகின்றோம்.

திமுக நீட் நாடகம்
நீட் தேர்வை இப்போது திமுக எதிர்க்கிறது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்த போது காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றிருந்தது. இப்போது நீட் தேர்வை திமுக எதிர்ப்பது என்பது நாடகம்தான். 13 மாணவர்களின் உயிரோடு விளையாடியதும் திமுகதான்.

பெரியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில் அவர் சமூக நீதிக்காகப் போராடியவர். அவருடைய பிறந்த நாளில் தந்தை பெரியாருக்கு வாழ்த்துகளைச் சொல்கிறோம். இதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு எல். முருகன் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications