எச்.ராஜா சிரிச்சாலும் பிரச்சினை.. சிரிக்காட்டியும் பிரச்சினையா.. இப்படி போட்டு கலாய்க்கிறீங்களேய்யா!

எச்.ராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் பாஜக தலைவர் எல்.முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "எச்.ராஜா முகத்துல ஏன் இவ்ளோ சோகம்.. அது என்னாது யானை தந்தமா.. ஏன் வந்தவரை உட்கார சொல்லலையா?" என்று ட்விட்டர்வாசிகள் எச்.ராஜா பதிவிட்ட ஒரு போட்டோ குறித்து கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.

தமிழக பாஜக தலைமைக்கு நீண்ட காலமாக யாரும் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன.. பல்வேறு பெயர்களும் மாநில தலைமைக்கு லிஸ்ட்டில் அடிபட்டன.

அதில் ஒவ்வொரு முறையும் தவறாமல் இடம்பெறுபவர் எச்.ராஜாதான்.. எச்.ராஜாவை பொறுத்தவரை கட்சியின் மூத்த தலைவர்.. அனுபவசாலி.. திறமைசாலி.. எதுவானாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதான்.. யாராக இருந்தாலும் நேருக்கு நேராக கேள்வி எழுப்புபவர்!

மாநில தலைமை

மாநில தலைமை

டெல்லி வரை அப்போதிருந்து இப்போது வரை செல்வாக்கு உள்ளனர்.. தலைவர்களிடம் நெருக்கமும், பாசமும் காட்டி வருபவர்.. அதனால்தான் மாநில தலைமை பதவிக்கு இவரது பெயர் பரிசீலனையில் நிச்சயம் இடம்பெறும். அந்த வகையில் இந்த முறையும் எச்.ராஜா பெயர் அடிபட்டது... ஆனால் இப்போதைய மாநிலத்தில் நிலவும் சூழலில், வாக்குகள்தான் முக்கியமாக தலைமை உணர்ந்துள்ளது.. அதேபோல, தாமரையை மலர வைத்துவிடுவது என்றும் ஒரு முடிவில் உள்ளது.

எல்.முருகன்

எல்.முருகன்

இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்துதான் பட்டியலினத்தை சேர்ந்த எல்.முருகனை தலைவராக நியமனம் செய்துள்ளது.. இந்த நியமன அறிவிப்பு வந்தவுடனேயே எச்.ராஜா அவருக்கு வாழ்த்துதெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். இந்நிலையில், மாநில தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர் எச்.ராஜா அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

ட்வீட்

அப்போது 2 பேரும் போட்டோக்களை எடுத்துள்ளனர்.. இந்த போட்டோக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.. அதில், "மாநில தலைவர் திரு.L.முருகன் அவர்கள் எனது இல்லத்திற்கு வந்திருந்தார். கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசித்தோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த போட்டோவில் எச்.ராஜாவுக்கு எல்.முருகன் பொன்னாடை போர்த்துகிறார்.. அப்போது இருவரின் பின்பக்கமும் ஷோ-கேஸில் யானை தந்தங்கள் உள்ளன.. பக்கத்திலேயே பசுமாடு-கன்றுக்குட்டி பொம்மையும் தென்படுகிறது.

போட்டோக்கள்

போட்டோக்கள்

இந்த போட்டோக்களை வைத்துதான் ட்விட்டர்வாசிகளின் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.. வாய்ப்பு தராததால் ஏன் எச்.ராஜா சோகமாக இருக்கிறாரா... எப்போதும் உற்சாகமாக இருப்பாரே.. ஏன் இந்த வருத்தம், . காண்டு கண்ணுல தெரியுது ராசா என்று பதிவிட்டுள்ளனர்.அதுமட்டுமல்ல.. ட்விட்ர்வாசிகளின் எல்லார் கவனமும் அந்த பொம்மை யானை தந்தம் மீதே விழுந்துள்ளது.

தந்தம்

தந்தம்

"பின்னாடி என்ன யானை தந்தம் மாதிரி இருக்கு", "தங்களுக்கு பின் வைத்திருப்பது யானை தந்தமா ஐயா?", அந்த யானை தந்தம் ஒரிஜினலா? பெர்மிஷன் இருக்குதா?", "கடைசிவரைக்கும் உட்கார சொல்லவே இல்ல போல", "இருந்தாலும் பில்லை கிழிச்சிட்டு சால்வை போர்த்தியிருக்கலாம்" என்று ஏகப்பட்ட கமெண்ட்கள் விழுந்தபடியே உள்ளன!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+