டாஸ்மாக்கில் தீபாவளிக்கு 2 புதிய வகை பீர்கள் அறிமுகம்.. கொந்தளித்த வானதி சீனிவாசன்- கடும் அட்டாக்!
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக்கில் 2 புதிய வகை பீர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை பாஜக மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கடுமையாக எதிர்த்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசு மதுபான கடைகளான டாஸ்மாக்கில் சூப்பர் ஸ்டிராங், கோல்டு பிரீமியம் லெகர் பீர், கிங்பிஷர், கிங்பிஷர் ஸ்டிராங், கிளாசிக் பீர், மேக்னம் ஸ்டிராங், எஸ்.என்.ஜே உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. டாஸ்மாக் மதுபான கடைகளில் கோடைகாலங்களில்தான் அதிக அளவு பீர்கள் விற்பனையாகும்.

தற்போது தீபாவளியை முன்னிட்டு தண்டர்போல்ட் ஸ்டிராங், காட்பாதர் என்கிற இரு புதிய பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் மேலும் 5 புதிய பீர் வகைகள் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான கடைகளில் அறிமுகப்படுத்த இருக்கின்றன.
தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் கூறியிருப்பதாவது: நாடெங்கும் மக்கள் தீபாவளி கொண்டாட தயாராகி வரும் வேளையில், அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தமிழக மக்களுக்கு தமிழக அரசின் கொடுத்த தீபாவளி பரிசு என்ன தெரியுமா ? " 2 வகை பீர்கள்". இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்கள் வரும் என கூறுவது தான் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர துடிக்கும் அரசின் நோக்கமா ? இது தான் திராவிட அரசின் சாதனைகளா? தீபாவளி என்பது குடும்பத்துடன் கொண்டாடப்படும் நாளா ? இல்லை குடியோடு கொண்டாடப்படும் நாளா ? மகளிர் பற்றி அக்கறை காட்டுவதாக கூறும் திமுக அரசு அதே மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா? இவ்வாறு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications