ஷூட்டிங் பீச்சுல நடக்குதே.. இதுல மட்டும் என்னவாம்?.. திமுக பதில் சொல்லியே ஆகணும்.. கொந்தளித்த பாஜக
திமுக அரசை கண்டித்து நாராயண் திருப்பதி பதிலடி தந்துள்ளார்
சென்னை: "மக்களின் கலாசாரத்தை, நம்பிக்கைகளை அழித்து விட்டால், ஹிந்து மதத்தை வேரறுத்து விடலாம் என்று திமுக அரசு நினைக்குமேயானால், அது பகல் கனவாகத் தான் முடியும்" என்று தமிழக பாஜக காட்டமாக விமர்சித்தள்ளது.
Recommended Video
சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஒரு பிரச்சனையை கிளப்பியிருந்தது.. ஆப்கானிஸ்தானிலிருந்து டால்கம் கற்கள் என்று பெயரில், சில போதை பொருட்கள் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. அங்குள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத் துறைமுகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்திருக்கின்றனர்...
பிடிபட்ட 2 கண்டெய்னர்களிலும் இருக்கும் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய் என்றும், சுமார் 3,000 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்ததாகவும் கூறப்பட்டது.

அதானி நிறுவனம்
ஆனால் அந்த ஹெராயின் பிடிபட்டுள்ள முந்த்ரா துறைமுகத்தை அதானி நிறுவனம்தான் நிர்வகிக்கிறது. மோடியின் நண்பர் அதானிக்காக மோடி அரசு பல்வேறு சலுகைகள் வழங்குவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படும் நிலையில் இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகத்தில் ஹெராயின் பிடிபட்டுள்ளதால், காங்கிரஸ் நிர்வாகிகள் ட்விட்டரில் மோடி அரசை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

மோடி
ஏற்கனவே அதானிக்காக மோடி அரசு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில், இந்த விவகாரம் அடுத்த பிரச்சனையை கிளப்பியது.. ஆனால், ' மோடியின் தயவுடன் போதைப்பொருள் கடத்தல்' என்பதை பார்த்து பாஜகவினர் கொந்தளித்தனர்.. இதற்கு தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதிதான் காட்டமாக பதிலளித்து ட்வீட் போட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
அதில், "திமுக நிர்வாகத்தில் தமிழக அரசு நடக்கிறது. மோசடி, முறைகேடுகள், மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு, கொலை,கொள்ளை, பலாத்காரம், ஆகியவை முதல்வர் ஸ்டாலின் தயவுடன் நடைபெறுகிறது என்று நாம் கேட்கலாமா? இது போன்ற முட்டாள்தனமான செய்தியை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்" என்று ஆவேசத்துடன் பதிவிட்டிருந்தார். அத்துடன், பாஜகவை சாடி வெளியான செய்தி லிங்க்கையும் தன்னுடைய ட்வீட்டில் ஷேர் செய்திருந்தார் நாராயண்.

அறிக்கை
இப்போது மீண்டும் ஒரு பிரச்சனைக்காக திமுகவை சாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.. இந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதால், ஒரு அறிக்கை வெளியிட்டு தன் ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். அந்த அறிக்கை இதுதான்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு, முன்னோருக்கு நீர் நிலைகளில் திதி தர்ப்பணம் செய்யும் வழக்கத்தை நீண்ட நாட்களாக ஹிந்துக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.

அவமதிப்பு
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்திற்கு வந்த மக்களிடம், போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். சினிமா படப்பிடிப்புக்கு கடற்கரையை பயன்படுத்த அனுமதிக்கும் அரசு, மக்களின் நம்பிக்கையை அவமதித்து, அவமானப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல.

பகல் கனவு
மக்களின் கலாசாரத்தை, நம்பிக்கைகளை அழித்து விட்டால், ஹிந்து மதத்தை வேரறுத்து விடலாம் என, திமுக அரசு நினைக்குமேயானால், அது பகல் கனவாகத்தான் முடியும்... இதற்கு திமுக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்... டெங்கு கொசுவை ஒழிக்கும் பட்டாசுகளை, தீபாவளி காலத்தில் தடை செய்வதை நிறுத்துவதே, சாதாரண மக்களை டெங்கு காய்ச்சலில் இருந்து காப்பாற்றும் என்பதையும் அரசு உணர வேண்டும்" என்று பதிலடி தந்துள்ளார்.

அண்ணாமலை
ஏற்கனவே தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களில் கோயில்களை திறக்காமல் உள்ளது.. அதுவும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே தமிழக அரசு அந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகிறது.. எனினும், மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்படியே, அரசு செயல்படுகிறது என்பதையும் அறியாமல், பாஜக கண்டனம் தெரிவித்து வருகிறது.. அனைத்து நாட்களிலும் கோயில்களுக்கு செல்ல அனுமதி கோரி, இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மாநில தலைமை அறிவித்துள்ள நிலையில், நாராயண் திருப்பதி பதிவிட்டுள்ள ட்வீட் மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications