மலை..அண்ணாமலை.. என்னது மோடியை சந்திக்க எனக்கு தடையா? காயத்ரி ரகுராமுக்கு 'போட்டோ' போட்டு பதிலடி!
சென்னை: திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தடை விதிக்கப்பட்டதாக அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடியை வரவேற்கும் படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா மற்றும் ரூ20,000 கோடி அரசு திட்டங்கள் தொடக்க விழா ஆகியவற்றில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற்றனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர். பாஜகவினரும் வரவேற்றிருந்தனர். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி, #GoBackModi திமுக ட்ரெண்டிங்கில் இருக்கும்போது. மோடி அமைதியாக #Goback420மலை சொல்லிவிட்டார். அண்ணாமலை விழாவிலோ வரவேற்பிலோ காணப்படவில்லை. டெய்சியின் சகோதரர் மெரினா பீச் புகழ் திருச்சி சூர்யாவை கூட மோடி சந்திக்க அனுமதிக்கப்பட்டார். பாவ யாத்திரை தொடரும் என பதிவிட்டிருந்தார். இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடியை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஏசி சண்முகம் உள்ளிட்டோருடன் வரிசையில் நின்று வரவேற்கும் காட்சி இடம் பிடித்துள்ளது. அதில் அண்ணாமலையின் கையை புன்னகைத்தபடி பிரதமர் மோடி பிடித்திருக்கிறார். மற்றொரு கையில் அண்ணாமலை கொடுத்த "Greatness of Srirangam" - The Hindu வெளியிட்ட புத்தகத்தையும் மோடி கையில் வைத்திருக்கிறார்.
On behalf of @BJP4TamilNadu, along with our Sr. Leaders had the honour & privilege of welcoming our beloved PM Thiru @narendramodi avl in Trichy yesterday.
— K.Annamalai (@annamalai_k) January 3, 2024
Our Hon PM has always been vocal about the eminence of the Tamil language & our rich culture and, on his arrival… pic.twitter.com/AjzCJoUSor
தி இந்து குழுமத்தின் Greatness of Srirangam புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசாக கொடுத்ததாக அக்குழுமத்தின் மாலினி பார்த்தசாரதி மற்றொரு பதிவில் அண்ணாமலைக்கு நன்றியும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?












Click it and Unblock the Notifications