TN BJP: தமிழக பாஜக ஆபீசில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன் தெரியுமா?.. கைதான வினோத் பரபரப்பு வாக்குமூலம்
தமிழக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைதானார்
சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட வினோத் முதல் கட்ட விசாரணையில் வாக்குமூலம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் தி.நகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் செயல்பட்டு வருகிறது.. இந்த அலுவலகத்தில் நள்ளிரவில் 3 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
3 மது பாட்டில்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது... ஆனால், பாஜக தலைமை ஆபீசில் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், பெட்ரோல் குண்டுகள் வெளியே விழுந்துள்ளன..

பெட்ரோல் குண்டு
இதனால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை... மேலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறார்கள்.. அப்போதும் அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாஜக ஆபீசில் குண்டு வீச்சு என்றதுமே அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்துவிட்டனர்.. பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

நேரில் ஆய்வு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு உடனடியாக தகவலும் தெரிவிக்கப்பட்டது... சம்பவ இடத்திற்கு விரைந்த தி.நகர் துணை ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார்... தனிப்படையும் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணையும் அப்போதே துவங்கப்பட்டது.. இதைதவிர, பாஜக அலுவலகத்திலும், அதை சுற்றியுள்ள சாலைகளிலும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அத்தனையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

வினோத் யார்?
இதில் சிசிடிவி வீடியோ காட்சி போலீசாருக்கு பேருதவியாக இருந்தது.. அந்த வீடியோவில் பதிவாகி இருந்த வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.. இவர் ஒரு ரவுடி.. கர்த்தா வினோத் என்று இன்னொரு பெயரும் உண்டு.. நந்தனத்தை சேர்ந்தவர்.. இவரிடம் தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... இதில் எதற்காக பெட்ரோல் குண்டு வீசினார் என்று வினோத் வாக்குமூலம் தந்து வருகிறாராம்.. அதில், நீட் தேர்வுக்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான், பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக முதல்கட்டமாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சிசிடிவி காட்சி
தொடர்ந்து வினோத்திடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. கைது செய்யப்பட்ட வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.. பாஜக தலைமை அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்... ஆனால் கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளை போலீசார் இன்னும் வெளியிடவில்லை...

திமுக ஆட்சி
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "பாஜக தலைமையகம் கமலாலயத்தில் 3 பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளன, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடந்துள்ளது. தலைநகரிலேயே பெட்ரோல் குண்டு கலாச்சாரம், நீங்கள் சட்டம் ஒழுங்கை காக்கும் லட்சணம் இதுதானா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உண்மை காரணம்
சமீப காலமாக நீட் விஷயத்தில் தமிழகம் அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் நொந்து போயுள்ளது.. நீட் விஷயத்தில் அனைத்து கட்சிகள் எடுத்து வைக்கும் கோரிக்கைகள் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்படுவதுடன், தமிழகத்தின் குரல் மத்திய அரசின் காதில் விழாமலேயே உள்ள நிலையில், இது பொதுமக்கள் தரப்பிலும் கொந்தளிப்பையே ஏற்படுத்தி வருகிறது.. ரவுடி என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும், நீட் விவகாரம் வினோத் என்ற நபரையும் பாதித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.. அதேசமயம், உண்மையிலேயே நீட் விவகாரத்துக்காகத்தான் வினோத் பெட்ரோல் குண்டு வீசினாரா? தன்னுடைய எதிர்ப்பை வேறு வழிகளில் அவர் காட்டாதது ஏன்? அல்லது அதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் நடக்கிறது..!
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications