எனக்கு கொரோனா அறிகுறி.. கந்த சஷ்டி புத்தகத்தோடு தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.. நயினார் நாகேந்திரன்
சென்னை: பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு போன நயினார் நாகேந்திரனுக்கு மாநில தலைவர் பதவி கிடைக்கும் என கூறப்பட்டது. மாநில தலைவர் பதவிக்கான பெயர்களில் அவரது பெயரும் பிரதானமாக அடிபட்டது.

அதிருப்தியில் நயினார் நாகேந்திரன்
ஆனால் திடீரென முருகன், பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். இதில் நயினார் நாகேந்திரன் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின.

கட்சி தாவும் நயினார்?
இதனையடுத்து நயினார் நாகேந்திரன் கட்சி தாவப் போவதாக செய்திகள் வெளியாகின. நயினார் நாகேந்திரனை திமுக வளைத்துவிட்டதாக கூறப்பட்டது. அதேநேரத்தில் அதிமுகவும் நயினார் நாகேந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் பரவின.

பேரம் பேசிய பாஜக
இதனால் டென்ஷனாகிப் போனது பாஜக. நயினார் நாகேந்திரனை தக்க வைத்துக் கொள்ள பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டது பாஜக. ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்து உங்களை ராஜ்யசபா எம்.பி.யாக்குகிறோம்; கட்சி மட்டும் தாவிவிடாதீங்க என பேரம் பேசியது பாஜக.

கொரோனாவால் தனிமை
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில்தான் நயினார் நாகேந்திரன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் !! எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும் , என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன்! கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன் !! வேலுண்டு வினையில்லை!!🙏🙏 என பதிவிட்டுள்ளார்.
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications