மோடி அங்கே அழறார்.. ஆனா முதல்வர் ஸ்டாலின்?.. அவரை வெளியேவர சொல்லுங்க: பாஜக வினோஜ் பி. செல்வம் கேள்வி
வினோஜ் பி செல்வம் கோவை வெடிவிபத்து குறித்து கேள்விகளை எழுப்பி உள்ளார்
சென்னை: "கோவை வெடிவிபத்து விவகாரம் குறித்து, தமிழக உள்துறை அமைச்சரை, வெளிப்படையாக பேச சொல்லுங்கள்.. இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு, இதை பற்றி பேசுவதைவிட வேறு என்ன வேலை அவருக்கு?" என்று தமிழக பாஜகவின் வினோஜ் பி செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
மேலும், கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளதாகவும், இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை, தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை என்றெல்லாம் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

வினோஜ் P செல்வம்
இந்நிலையில், தமிழக பாஜகவின் இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம், நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் இவைதான்: "சிலிண்டர் வெடிப்பு என்பதை தாண்டி இதை பார்க்க முடியவில்லை என்பதுதான் தலைகுனிவான விஷயம்.. தமிழக மீடியா நேர்மையாக இருக்க வேண்டும்.. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முக ஸ்டாலின், வெளியே வந்து இந்த சம்பவம் தொடர்பாக எப்போது பேசுவார்? தனியாக ஒரு நபர் இப்படி அட்டாக் செய்வது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்தக்கூடியது.. சம்பவம் நடந்தது எப்போது, இந்த கேஸை என்ஐஏவுக்கு மாறியது எப்போது?

டிஜிபி
எல்லா இடத்திலும் சிலிண்டர் வெடிக்கத்தான் செய்யுது.. அங்கெல்லாம் டிஜிபி நேரில் போகிறாரா? இந்த வெடிப்புக்கு ஏன் செல்கிறார்? ஆனால், வெறும் சிலிண்டர் வெடிப்பு என்று செய்தியாளர்களிடம் சொல்கிறார்.. 500 கிலோ மீட்டருக்கு மேல் வெடிமருந்தை கைப்பற்றியும், ஏன் இதை பற்றி பேச தயங்குகிறார்கள்? கோவைக்கு நான்தான் அமைச்சர் என்று சொல்லக்கொள்ளும் செந்தில்பாலாஜி, இதை தீவிரவாத தாக்குதல் என்று ஒப்புக் கொள்கிறாரா? அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட சோடியம் நைட்டிரேட், பொட்டாசியம் போன்றவற்றுக்கு என்ன பதில்? அம்மோனியம் நைட்டிரேட்டை விவசாயத்துக்கு பயன்படுத்துவேன் என்று சிவசேனாதிபதி சொல்கிறாரே..

டாக்குமெண்ட்
அவர் வீட்டில் அந்த மருந்து இருக்கிறதென்றால் முதலில் கைது செய்ய வேண்டியது சேனாதிபதியைதான்.. அவரைதான் முதலில் விசாரிக்க வேண்டும்.. அது ஒரு வெடிமருந்து.. ஆனால், விவசாயத்துக்கு பயன்படுத்துவோம் என்று சொல்லும் திமுக சகோதரர்கள் இருக்கும்வரை, இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பே இல்லை.. அதுவரை பாஜக இதுக்காக போராடும்.. அண்ணாமலைக்கு டாக்குமெண்ட் எப்படி கிடைத்தது என்றுதான் இவர்கள் கவலைப்படுகிறார்களே தவிர, அந்த டாக்குமெண்ட்டில் உள்ள விஷயங்களை பற்றி பேசுவதில்லை.. தமிழக காவல்துறை நேர்த்தியாக இந்த வழக்கை கையாண்டு, சந்தேகம் எழுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்..

புரோடோக்கால்
அதனால்தான், ஒரு மக்கள் தலைவராக, மக்கள் பிரதிநிதியாக, மக்களுக்கு உண்மையை எடுத்து சொல்லக்கூடிய நபராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை.. அவர் ஒரு சாதாரண அரசியல்வாதிகிடையாது.. ஐபிஎஸ்ஸாக பணியாற்றியவர்.. அவருக்கு புரோடோக்கால் பற்றி தெரியும்.. கையில் கிடைத்த டாக்குமெண்ட் விவரங்கள் தெரியும்.. அதைதான் மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்.. அந்த டாக்குமென்ட் பற்றி, எனக்கு நோட்டீஸ் கொடுங்கள், விசாரணைக்கு கூப்பிடுங்கள், முறைப்படி பதிலை சொல்கிறேன் என்று உத்தரவாதம் தந்திருக்கிறாரே?

அறிவாலயம்
அன்று மத்திய ஏஜென்சி தந்த தகவல்களை, மாநில அரசு சரியாக கையாண்டிருந்தால், இப்படி ஒருசம்பவமே நடந்திருக்காது.. அதை செய்ய தவறிவிட்டார்கள், அதுக்காக எல்லா காவல்துறையையும் குறை சொல்லவில்லை.. ஆனால், டிஜிபி தந்துள்ள அறிக்கை உண்மையிலேயே எங்களுக்கு சங்கடமாக இருக்கு.. அறிவாலயத்தில் வந்த அறிக்கை மாதிரி அது இருக்கு.. டிஜிபி என்பவர் பொதுவாக இருக்க வேண்டும்.. கட்சி வேறுபாடின்றி செயல்பட வேண்டும்.. இந்த வெடிவிவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம், அதில் பெரிதாக எதுவுமே இல்லை என்கிறார்கள்.. எதுவுமே இல்லை என்றால் எதுக்காக என்ஐஏவுக்கு வழக்கை மாற்ற வேண்டும்? இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்பதை கோவையில் உள்ள இஸ்லாமியர்களே ஏற்றுக் கொள்கிறார்கள்.. ஜமாத்திலேயே சொல்லிட்டாங்க..

பில்டிங்
அது தீவிரவாத தாக்குதல்தான் என்பதை இவர்கள் ஏன் ஒப்புக் கொள்ளவில்லை.. 200 பேர் செத்தால்தான் அது தீவிரவாத தாக்குதலா? ஒரு பில்டிங்கை தகர்த்தால்தான் ஒப்புக் கொள்வீர்களா? முபீன் ஒரு தீவிரவாதி.. தீவிரவாதியை தீவிரவாதி என்று சொல்லக்கூடிய தைரியம் ஒரு அரசாங்கத்துக்கு தேவை. தமிழ்மண்ணில் தீவிரவாதம் நடக்கிறது என்றால், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்து கொள்கிறோம் என்று சொல்வதுதான் அரசாங்கத்தின் கடமை. தமிழக உள்துறை அமைச்சரை, இந்த விஷயத்தை பற்றி வெளிப்படையாக பேச சொல்லுங்கள்.. இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு, இதை பற்றி பேசுவதைவிட வேறு என்ன வேலை அவருக்கு?

கண்ணீர் மோடி
திமுகவின் ராஜீவ்காந்தி, சேனாதிபதி, இவங்க யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.. போலீசுக்கு பொறுப்பாக இருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் வெளியே வந்து இதுதான் நடந்தது என்று சொல்ல வேண்டும்.. டிஜிபி எல்லாம் வேணாம்.. மக்கள் டிஜிபிக்காக ஓட்டுப்போட்டாங்க? நேத்து குஜராத்தில் நடந்த சம்பவத்துக்கு மக்கள் மத்தியில் பிரதமர் கண்ணீர் விட்டு அழறார்.. வருத்தம் தெரிவிக்கிறார்.. அப்படி இருக்கும்போது, ஏன் ஒரு முதல்வருக்கு இங்கே அவ்வாறு செய்ய முடியவில்லை.. தைரியமில்லையா மக்களை சந்திப்பதற்கு? முதல்ல அவரை வெளியே வந்து பேச சொல்லுங்க" என்றார்.
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications