சாதனை படைக்கும் புதுமைப் பெண் திட்டம்.. உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்வு
புதுமை பெண் திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ 1000 நிதியுதவி அளிக்கப்படுவதால் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எணணிக்கை உயர்வு
சென்னை: புதுமை பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ 1000 நிதியுதவி அளிக்கப்படும் என்பதால் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2023- 2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தமிழக சட்டசபையில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் புதுமைப் பெண்கள் திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ 1000 நிதி வழங்கப்படும் என்பதால் உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் 20,477 மாணவிகள் உயர்கல்வி பயில்கிறார்கள் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி
இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. குடும்பச் சூழல், வறுமை காரணமாக படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய இது வழி வகை செய்யும்.

12000 மாணவிகள்
இந்த திட்டத்தின் மூலம் இடைநின்ற 12000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வி பயில்வதாகவும் அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்ட ஒரு கையெழுத்து லட்சக்கணக்கான பெண்களின் தலையெழுத்தை மாற்றியது. திமுக ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. நாடு தன்னிறைவுடன் திகழ மக்கள் கல்வியறிவு பெறுவது அவசியம் என முதல்வர் ஸ்டாலின் இதன் துவக்க விழாவில் பேசியிருந்தார்.

முதல் கட்டமாக இந்த திட்டம்
முதல் கட்டமாக இந்த திட்டம் வடசென்னையில் உள்ள பாரதி கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக இந்த திட்டத்துக்காக கடந்த 5 மாதங்களில் 69.44 கோடி ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வி படிப்பை தொடர்ந்துள்ளனர். இதுவே இந்த திட்டத்தின் வெற்றி என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

முதலாமாண்டு மாணவிகள்
இதுவரை இருந்த திட்டத்தில் 2,3,4 ஆம் ஆண்டில் பயிலும் மாணவிகள் பயனடைந்தனர். தற்போது முதலாமாண்டு பயிலும் மாணவிகளும் இந்த திட்டத்தில் பயன்பெற https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.

புதுமைப் பெண் திட்டம்
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் வருகிற 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது. மாணவிகள் தவறாமல் தங்களது ஆதார் கார்டு மற்றும் மாற்றுச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறி இருந்தால் அவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூகநல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், 91500 56809, 91500 56805, 91500 56801 மற்றும் 91500 56810 என்ற செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications