சிக்சர்.. அடிச்சு தூக்க போகும் ஸ்டாலின்! பரபரப்பாய் தயாராகி வருது தமிழக பட்ஜெட்! பெண்களுக்கு ஹாப்பி!
சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது முழு பட்ஜெட் அறிவிக்கப்பட இருக்கிறது. இதில் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என்கின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலில் தேசிய கீதம் பாடவில்லை என ஆளுநர் தனது உரையை புறக்கணித்த நிலையில் சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரை அவை குறிப்பில் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 11-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு அரசியல் கட்சியினர் பேசிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் பதில் உரை இடம் பெற்றது. தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாதம் 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் தமிழகத்தின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அடுத்த நாள் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு பட்ஜெட் இதுவாகும். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என கூறுகின்றனர் அதிகாரிகள்.
குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு முக்கிய காரணம். மகளிர்க்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் பயன் பெற்று வருகின்றனர்.
மாதாமாதம் அவர்களது வங்கி கணக்கிலேயே இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு மகளிருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இலவச பேருந்து பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதோடு மகளிர் சுய உதவிக் குழு கடன் தொகை உயர்வு, பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை, கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பெட்ரோல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஏற்கனவே ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள், மேல் முறையீடு செய்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகள் இதில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications