Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்ஜெட்டில் 'மாஸ்' அறிவிப்புகள்- சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் 2025-26-ல் இடம் பெறக் கூடிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய ஆளும் திமுக அரசு, தமது கடைசி முழுமையான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால், இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் முழுமையான இறுதி பட்ஜெட் இது.

budget 2025-26 tamilnadu cabinet 2025-26

2021 சட்டசபை தேர்தலில் திமுக ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கி ஆட்சியைக் கைப்பற்றியது. அதில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் திமுக அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இதனையடுத்து இந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தாகல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய தொழில் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையிலான புதிய சலுகைகள், அறிவிப்புகள் உள்ளிட்டவை இடம் பெறும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கேற்ப தமிழ்நாடு பட்ஜெட் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகள், விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றும் அம்சங்களும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம் பெறக் கூடிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனால் இன்றைய அமைச்சரவைக் கூட்டமும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருக்கும் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+