"புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா.." பட்ஜெட்டில் மேஜர் அறிவிப்பு! ஆனால் நிபந்தனைகள் என்ன?
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் பட்டா வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்போது பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றன. அதன்படி இன்று தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

இதில் பள்ளிக்கல்வி, தொழிலாளர் நலன், உள்கட்டமைப்பு என பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் பட்டா வழங்குவது குறித்தும் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
பட்டா
இது தொடர்பாக அவர் தனது பட்ஜெட் உரையில், "ஏற்றத்தாழ்வற்ற. சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்குடன் சொந்த வீடற்ற / நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா வழங்குவதை அரசு தன் முன்னுரிமைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதுவரை 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 இலட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும்.
சென்னை மாநகர் மற்றும் அதன் சூழ் பகுதிகளில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் தகுதியுடைய குடும்பங்களுக்கும். அதேபோன்று மாவட்டத் தலைநகரின் 16 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள பகுதிகள் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சியின் 8 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள பகுதிகளில் வீட்டுமனை ஒப்படை வழங்க விதிக்கப்பட்ட தடையாணை ஒருமுறை தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.
வரைபடம்
உயர் தெளிவுத்திறன் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் உதவியுடன் பன்முகத் தொழில்நுட்பங்களின் வாயிலாக உயர் தெளிவுத்திறன் பெருவிகித அளவிலான (High-Resolution Large-Scale Map) வரைபடம் ஒன்று நமது மாநிலத்திற்காக உருவாக்கப்படும். இதன் மூலம் நில அளவை பேரிடர் மேலாண்மை திட்டமிடல் மற்றும் இதர உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இவ்வரைபடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.
வளர்ச்சி திட்டங்கள்
வீட்டு வசதித்துறை குறித்த அறிவிப்பில், "தமிழ்நாட்டில் எழில்மிகு இயற்கைச் சூழலுடன் கூடிய மலைப்பகுதிகளின் வளர்ச்சியை முறைப்படுத்திட வேண்டிய தேவை எழுந்துள்ளது. அந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் குன்னூர். கோத்தகிரி கூடலூர். நெல்லியாளம் பகுதிகள், கோவை மாவட்டத்தில் வால்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்டத்தில் கொடைக்கானல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 1200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மலைப் பகுதிகளுக்கான முழுமையான வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும்.
சுற்றுலாத் தலங்களை அடையாளம் கண்டு சுற்றுச்சூழல் பாதிப்பின்றி அவற்றை மேம்படுத்துதல், நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் இதர இயற்கைப் பேரிடர்களைத் திறமையாக எதிர்கொள்ளும் வகையிலான பேரிடர் மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இப்பகுதிகளுக்கு உரிய வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படும்.
மறு கட்டுமானம்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாகப் பழுதடைந்த நிலையில் உள்ள 6.424 குடியிருப்புகள் 1148 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்பட்டு வருகின்றன இதைத் தொடர்ந்து. அடுத்த இரு ஆண்டுகளில், 5,256 குடியிருப்புகள் 1051 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்படும்.
குறைந்த வருமானம் கொண்ட வகையினருக்கான வீட்டுவசதித் தேவையை நிறைவு செய்திடவும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகளை ஏற்படுத்திடவும் உதவிடும் வகையில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ. 7.718 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications