இப்படித்தான் சட்டப்பேரவையை நடத்தனுமா? ஆளுநரை அவமதிப்பதுதான் திராவிட மாடலா? எல் முருகன் ஆவேசம்
சென்னை: தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநரை அருகில் வைத்து கொண்டு அமைச்சர் போல எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்பது போல செய்கிறார் எனவும், தேசிய கீதத்தை புறக்கணித்து, ஆளுநரை அவமதிப்பது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா...? என மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநரின் உரையுடன் தான் தொடங்கும். இதன்படி நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநரின் உரையுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளுநர் தனது உரையை முழுமையாக வாசிக்க மறுத்துவிட்டார்.

உரையை வாசிக்க மறுத்ததற்கு அவர் இரண்டு காரணங்கள் சொல்லியிருந்தார். ஒன்று, ஆளுநர் உரை என்பது அரசின் பாலிசி உரை தான். இதை அரசு தான் தயார் செய்து கொடுக்கும்.. அதை ஆளுநர் வாசிக்க மட்டுமே செய்வார். ஆனால், தமிழக அரசின் உரையில் உள்ள சில கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் எனவே இதை வாசித்தால் அரசியல் சாசன பதவியை கேலிக்குள்ளாக்குவதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
இதேபோல் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி தெரிவித்தார். அதாவது தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் வாசிக்கப்பட வேண்டும் எனத் தான் குறிப்பிட்டதாகவும் இருப்பினும் தொடக்கத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் விடுவது இதுவே முதல்முறை.
இதன் பின்னர் ஆளுநர் ரவி படிக்காமல் விட்ட உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது ஆளுநர் ரவி சட்டசபையில் தான் இருந்தார். ஆளுநர் வாசிக்க மறுத்த உரையை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்து நிறைவு செய்தார். தொடர்ந்து சட்டசபையில் ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவி புறக்கணித்த உரை சட்டசபையில் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆளுநர் பேசிய சில வார்த்தைகள் உரையில் இல்லாத சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்த நிலையில், ஆளுநரை விமர்சித்தது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தமிழக அரசை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் எல் முருகன் கூறியிருப்பதாவது:-

மீண்டும் மீண்டும் - தேசிய கீதத்தை அவமானப்படுத்தும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்..! தமிழ்நாடு சட்டபேரவையில், இந்த ஆண்டுக்கான முதல் நாள் மாண்புமிகு ஆளுநர் உரையுடன் தொடங்கும் போது, ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்துடன் தொடங்க வேண்டும் என்று சொல்லியுள்ளார், அதை கூட செய்யமுடியாது என்ற தமிழக அரசின் ஆணவபோக்கு மிகவும் கண்டனத்துக்கு உரியது.
தராசு முள்போல இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், ஆளுநர் அவர்களை அருகில் வைத்து கொண்டு அமைச்சர் போல எதிர்க்கட்சிகளை கேள்வி கேட்பது போல செய்கிறார். இது தான் ஜனநாயகமா ? இப்படி தான் மக்கள் போற்றும் சட்டபேரவையை நடத்தப்பட வேண்டுமா ? தேசிய கீதத்தை புறக்கணித்து, மாண்புமிகு ஆளுநரை அவமதித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமரியாதை செய்வது தான் இந்த போலி திராவிட மாடல் ஆட்சியா...?. இவ்வாறு அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications