தமிழக சி.பி.எஸ்.இ. தேர்வுகளில் நூதன முறைகேடுகள்.. முதல் பருவ தேர்வுகள் ரத்தாகிறதா?
சென்னை: தமிழக சி.பி.எஸ்.இ பருவத் தேர்வுகளில் ஆசிரியர்கள் உதவியுடன் நூதன முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து சி.பி.எஸ்.இ. பருவத் தேர்வுகள் ரத்தாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான மையங்களாக அந்தந்த பள்ளிகளே அறிவிக்கப்பட்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் அதிகாரம் வழங்கியது சி.பி.எஸ்.இ. நிர்வாகம்.

பருவத் தேர்வுகள்
இத்தேர்வுகள் கடந்த மாதம் நவம்பர் 28 முதல் டிசம்பர் 22 வரை நடைபெற்றது. இத்தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்களாக பள்ளிகளின் முதல்வர்களே இருந்தனர். இத்தேர்வுக்கான வினாக்கள், ஒரு மதிப்பெண் வழங்க கூடியதாகவும் விரிவான விடைகள் இல்லாமல் இருந்தன. மார்ச் மாதம் நடத்துகிற தேர்வில் விரிவான வினாக்கள் இடம்பெறுமாம். கொரோனா காலம் என்பதால் இப்படி ஏற்பாடு செய்ததாம்.

நூதன முறைகேடுகள்
இந்த தேர்வில்தான் முறைகேடுகள் நடந்துள்ளன; பள்ளி நிர்வாகங்களும் ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களை நூதன வழிகளில் முறைகேடுகள் செய்ய உடந்தையாக இருந்ததாகவும் க்கூறப்படுகிறது. அதாவது கேள்வித்தாள்களை முன்கூட்டியே மாணவர்களுக்கு லீக் செய்திருக்கிறது பள்ளி நிர்வாகம். வாட்ஸ் அப் உள்ளிட்டவை மூலம் வினாத்தாள்களை பள்ளி நிர்வாகங்களே மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறது.

விடைத்தாள் திருத்தம்
ஒரே மையில்தான் தேர்வு எழுத வேண்டும்; தெரியாத வினாக்களுக்கு பதில் அளிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கு அறிவுறுத்தியது. அத்துடன் சந்தேகத்துக்குரிய வினாக்களுக்கு ஸ்மால் லெட்டர் c என எழுதி வைத்தால் போதும். இதனை a,b,d என எப்படி வேண்டுமானாலும் ஆசிரியர்களே மாற்றிவிடுவார்களாம். தங்களது பள்ளிகளின் ரிசல்ட்டை அதிகரிக்கும் வகையில் இத்தகைய முறைகேடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து?
இது தொடர்பாக சி.பி.எஸ்.இ நிர்வாகத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இதனால் முதல் பருவ சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்தாகக் கூடும் என்கின்றன கல்வித்துறை வட்டாரங்கள்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications