பிரதமர் மோடியுடன் ஜன.19-ல் சந்திப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
சென்னை: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திப்பதற்காக தமிழக முதல்வரும் அதிமுக முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என பாஜக கூறி வருகிறது. அதிமுக- பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிக இடம்பெறுமா? என்பது உறுதியாகவும் இல்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பின் போது புயல் நிவாரண நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த உள்ளார்.
மேலும் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க மோடிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுப்பார் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் சட்டசபை தேர்தல், சசிகலா விடுதலைக்குப் பின் அதிமுக நிலைமை உள்ளிட்டவை குறித்தும் மோடி, அமித்ஷா, நட்டாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் எனவும் தெரிகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications