4 மணி நேரம் கேள்வி மேல் கேள்வி கேட்ட முதலமைச்சர்! வெலவெலத்துப் போன ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்!
சென்னை: அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
சுமார் 4 மணி நேரம் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துறையின் செயல்பாடுகள், அரசின் அறிவிப்புகளை செயல்படுத்துதல் என பல்வேறு விவகாரங்கள் பற்றி அலசி ஆராய்ந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
குறிப்பிட்ட ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தவிர பெரும்பாலானோர் நம்மை நோக்கி என்ன கேள்வி வருமோ என்ற அச்சத்துடனே அமர்ந்திருந்ததாக தெரிவிக்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
இதனிடையே அந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

4வது கூட்டம்
ஆட்சி அமைந்த பிறகு நடக்கக்கூடிய நான்காவது அனைத்துத் துறையினுடைய செயலாளர்கள் கூட்டம் இந்தக் கூட்டம். உங்கள் அனைவரையும் தனித்தனியாகத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும், அனைவரையும் ஒருசேரச் சந்திப்பது என்பது மிகமிக முக்கியமான ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைக் கவனித்து வந்தாலும், யாரும் தனியாகச் செயல்பட இயலாது.

1580 அறிவிப்புகள்
ஒவ்வொரு துறை சார்பிலும் நிறைவேற்றப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களை நான் இங்கு பட்டியலிடுவதாக இருந்தால், அதுவே பல மணிநேரம் ஆகும். 2021-22-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1680 அறிவிப்புகளில் 100 அறிவிப்புகள் நீங்கலாக, 1580 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, ஏறக்குறைய 94 விழுக்காடு அறிவிப்புகள் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

937 அறிவிப்புகள்
2022-23-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 1634 அறிவிப்புகளில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆய்வின்போது, 23 விழுக்காடு அறிவிப்புகளுக்கு மட்டுமே அரசாணைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, 12.09.2022 அன்றைய நிலவரப்படி பார்த்தீர்கள் என்றால், ஏறக்குறைய 57 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அதாவது 937 அறிவிப்புகளுக்கு உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு, செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

உற்சாகமும், ஆர்வமும்
மீதமுள்ள அறிவிப்புகளுக்குரிய ஆணைகளுக்கு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்குள் வெளியிடக்கூடிய வகையில் செயல்படுமாறு நம்முடைய அனைத்துத் துறையினுடைய செயலாளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.இவற்றையெல்லாம் செயல்படுத்துவதற்கான உற்சாகமும், ஆர்வமும் செயல்திறனும் தொடர வேண்டும் என்று அனைத்து அரசுத் துறைச் செயலாளர்களையும் நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

சிந்தித்து முடிவு
அதே நேரத்தில் கூடுதல் கவனம் தேவை என்பதையும் நான் உங்களுக்கு சுட்டிக் காட்டுவது எனது கடமையாகக் கருதுகிறேன். சில திட்டங்களை அறிவிக்கிறோம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் ஆகிறது. இத்தகைய காலதாமதம் தவிர்க்கப்பட்ட வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக சிந்தித்துக் கொண்டே இருந்து விடக் கூடாது.

நிதி நெருக்கடி
நிதி நெருக்கடியில் நாம் இருக்கிறோம் என்பது உண்மை தான். எனவே, எந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் தர வேண்டுமோ அந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றை செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். எத்தனையோ திட்டங்களைத் தீட்டினாலும், முதலமைச்சரால், மற்றும் அமைச்சர்களால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அதிகமான கவனத்தைப் பெறும். அது இயற்கை தான். அப்படி கவனம் பெறும் திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி முடித்தாக வேண்டும்.

உங்களோடு தொடர்பில்
குறிப்பிட்ட சில அரசுத் துறைகளின் செயல்பாடுகள் பொது வெளியிலும், சமூக ஊடகங்களாலும் விமர்சனம் செய்யப்பட்டது. இவற்றில் துறைச் செயலாளர்கள் இதுபோன்ற இனங்களில் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.துறை ரீதியாக நான் உங்களோடு நேரடி தொடர்பில் இருக்கிறேன். அமைச்சர்கள் இருக்கிறார்கள். முதலமைச்சர் அலுவலகமும் உங்களோடு தொடர்பில் இருக்கிறது. சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கிறது.

கள ஆய்வு
இதே போன்ற ஒருங்கிணைந்த செயல்பாடு உங்களுக்கும், உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளுக்கும் இருக்கிறதா? என்றால் ஒருசில துறைகளில் இல்லை.அத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் தான் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் காலதாமதமும், தொய்வும் ஏற்படுகிறது. எனவே, அதனை சரிசெய்திட இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களை, கண்காணிப்புக் கூட்டங்களை, திட்டமிடும் கூட்டங்களை, கலந்துரையாடல் கூட்டங்களை உங்களுக்கு கீழேயுள்ள அதிகாரிகளோடு தொடர்ந்து நீங்கள் நடத்த வேண்டும் என்றும், கள ஆய்வுகளில் நீங்கள் ஈடுபட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
-
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்!












Click it and Unblock the Notifications