இந்த ஆண்டில் மட்டும் 198 பேர்.. ‘இந்தியாவுக்கு சவால் விடும் இலங்கை' - முதல்வர் ஸ்டாலின் பரபர கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த ஆண்டில் இதுவரை 198 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் 198 பேர்

இந்த ஆண்டில் 198 பேர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "16.11.2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 198 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்." எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிக்கடி சிறை

அடிக்கடி சிறை

மேலும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறையில் அடைக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும், மீன்பிடித் தொழிலை முழுமையாக நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து கொண்டே இருக்கிறது

தொடர்ந்து கொண்டே இருக்கிறது

மேலும் அந்தக் கடிதத்தில், "இந்தியத் தரப்பிலிருந்து பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரும் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்கிறது, தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 100 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது இலங்கை வசம் உள்ளது. இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

உடனடியாக விடுவிக்க

உடனடியாக விடுவிக்க

பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறும் செயல் இந்தியாவுக்கு ஒரு சவால் போல காணப்படுகிறது. இது தொடர்பாகத் தேவையான தூதரக நிலை நடவடிக்கைகள் எடுக்கவும், தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகினையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+