முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் தொலைபேசியில் வாழ்த்து!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்
இது தொடர்பாக பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

ராமதாஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்கள். தமிழக முதலமைச்சரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படியும் ராமதாஸிடம் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சரிடம் நலம் விசாரித்த ராமதாஸ், தமிழக முதலமைச்சருக்கும் தமிழக அரசுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்கள். இவ்வாறு பா.ம.க. செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் வாழ்த்து
இதேபோல் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications