பக்காவாக மாறுதே சென்னை.. ரூ.1645 கோடியில் மேம்பாலங்கள், சாலைகள்! களத்தில் இறங்கி இறையன்பு ஆய்வு
சென்னை: சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.1645 கோடி மதிப்பிலான மேம்பால மற்றும் சாலை கட்டுமான பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க உத்தர்விட்டார்.
முதலாவதாக திருவான்மியூர் முதல் அக்கரை வரை நான்கு வழிச்சாலையாக உள்ள கிழக்கு கடற்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்கும் பொருட்டு ரூபாய்.1111 கோடி மதிப்பில் 10.50 கிமீ நீளத்திற்கு நில எடுப்புடன் கூடிய சாலை அகலப்படுத்தும் பணியை தலைமைச் செயலாளர் ஆய்வு செய்து நில எடுப்பு மற்றும் கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்கள்.

அதனை தொடர்ந்து, சென்னை சோழிங்கநல்லூரில், ராஜீவ்காந்தி சாலை - கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலையான கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் சோழிங்கநல்லூர் ஏரியிலிருந்து பாகிங்ஹம் கால்வாய்க்கு மழை காலங்களில் உபரி நீர் செல்லும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.47 கோடி செலவில் 1.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.
மழைநீர் கால்வாய் பணிக்கு பயன்படுத்தப்படும் சிமெண்ட், கம்பி ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் தரக்கட்டுப்பாடு குறித்தும் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பின்னர், தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியையும் சேலையூரையும் இணைக்கும் பொருட்டு ஆறு வழித்தடத்தில் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையால் 8.0 கி மீ நீளத்திற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கிழக்கு புறவழிச்சாலையில் ரூபாய் 64 கோடி மதிப்பில் 5.40 கி மீ நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது மற்றும் ரூபாய் 56 கோடி மதிப்பில் 2.60 கி.மீ நீளத்திற்கு பணிகள் நடை பெறவுள்ளன. மேலும் இப்பணிக்கான நில எடுப்பு பணிகள் புத்தூர் மற்றும் நெடுங்குன்றம் ஆகிய வருவாய் கிராமங்களில் நடைபெற்றுவருகின்றன. கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்க அரசு தலைமை செயலர் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, ரயில்வே கடவு எண் 32 (LC 32) தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பெருங்களத்தூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி (ROB) ரூ.234.37 கோடி மதிப்பிலான பணிகளையும் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார். இப்பாலத்தின் ஒரு பகுதி ஏற்கனவே மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

பின்னர் சென்னை குரோம்பேட்டை நகர் பகுதியில் ஜி எஸ் டி சாலையையும் ராதா நகர் பகுதியையும் இணைக்கும் வகையில் ரயில்வே தடத்தை கடக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதை ரூபாய் 29 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை ஆய்வு செய்த அரசு தலைமை செயலாளர் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
போக்குவரத்து மிகுந்த சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் சர்தார் படேல் சாலையையும் ராஜிவ் காந்தி சாலையையும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டு வரும் ரூபாய் 59 கோடி மதிப்பிலான சாலை மேம்பால பணிகளையும் தகவல் தொழில் நுட்பச் சாலையான ராஜிவ் காந்தி சாலையில் இந்திரா நகர் மற்றும் டைடல் பார்க் சந்திப்பில் ரூபாய் 109 கோடி மதிப்பில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் இரண்டு 'ப' வடிவ சாலை மேம்பாலங்களை அரசு தலைமை செயலர் ஆய்வு செய்து பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications