ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் வழக்கு.. இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு!
சென்னை: ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூடுகிறது.
கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஆங்காங்கே ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன் கிடைக்காமல் ஏராளமானோர் மரணிக்கும் சூழல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்ஸிஜன் உற்பத்தியை செய்யலாமே என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
முதல்வர் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 9.15 மணிக்கு கூட்டம் கூடுகிறது. ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!











Click it and Unblock the Notifications