வளம் மிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள் - முதல்வர் வாழ்த்து
அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
சென்னை: வருங்காலத் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச்செல்வம் தந்து ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை போதித்து வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தினம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு ஆசிரியர் பணியை தொடங்கி தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின் குடியரசுத்தலைவராக உயர்ந்த மாமேதை டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் கடந்த 1962ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற கொன்றை வேந்தன் பாடலில் ஔவையார் ஒருவருக்கு எண்ணும் எழுத்தும் கண்களைப் போன்றது என்று கல்விச்செல்வத்தின் பெருமையை குறிப்பிட்டுள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற தெய்வ நிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள்.


அரும் பணியாற்றுபவர்களுக்கு உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச்செல்வம் தந்து ஒழுக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சியை போதித்து வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு இந்த நாளில் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications