காதுல மைக்கு.. மார்டனாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி.. ராயபுரத்தில் கலகல பிரச்சாரம்!
சென்னை: பயங்கரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி நரேந்திர மோடிக்குத்தான் இருப்பதாகவும் எனவே அதற்காகவே அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக, பாஜக, பாமக, தேமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாக போட்டியிடுகின்றன. இதேபோல் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐஜேகே,மதிமுக, உள்ளிட்டவை ஓர் அணியாகும் கூடடணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தலையில் மைக்
வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். ராயபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பழனிசாமி, கையில் பிடிக்கும் மைக்கில் அல்லாமல் தலையில் மாட்டிய மைக்குடன் பொதுமக்களிடம் பேசினார்.

பாதுகாப்பான நாடு
அப்போது அவர் கூறுகையில், "நாட்டினுடைய பாதுகாப்பு மிக முக்கியம். எந்த ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கிறதோ அங்கு தான் வளங்கள் அனைத்தும் இருக்கும். அப்படி பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்றால், ஒரு திறமை மிக்க, வலிமை மிக்க தலைவர் இந்த நாட்டை ஆள வேண்டும்.

அதிமுக கூட்டணி
அப்படி தகுதி வாய்ந்த பிரதமர் நமது நரேந்திர மோடி. நம் நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், அண்டை நாடுகள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்து சதி செயல்களை செய்வதை பார்த்திருக்கிறோம் அப்படிப்பட்ட தீவிரவாதிகளை வேரோடு, கூண்டோடு அழிக்கக்கூடிய சக்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் இருக்கிறது. எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலில் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.

எங்க ஊர்க்காரர்
நாம் அமைத்துள்ள கூட்டணி மெகா கூட்டணி, பலம் பொருந்திய கூட்டணி, நமது தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அவரும் அன்பானவர், எனது மாவட்டத்துக்காரர். நாங்கள் அருகருகே வசிக்கிறோம். மக்களுக்காக ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். இங்கிருக்கின்ற பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து மக்களுககு நல்ல திட்டங்களை பெற்றுத்தருவார் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலினுக்கு பதில்
இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசுகையில், அதிமுக கூட்டணி நாட்டிலே என்ன நன்மை செய்தது என்று கேட்கிறார். அதிமுக இயக்கம் மக்களுக்காக செய்தது ஏராளம். மக்களுக்காவே வாழ்ந்தவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆரும் புரட்சி தலைவி ஜெயலலிதாவும், அவர்கள் ஏராளமான நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கி இருக்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications