சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் செயல்படும் நேரத்தை புதிதாக பதவி ஏற்கும் முதல்வர் ஸ்டாலின் குறைக்க போவதாக தகவல்கள் வருகின்றன.

Recommended Video

    ஒப்பந்த செவிலியர்களின் பணி நிரந்தரம்.. பத்திரிகையாளர்கள் முன்களப்பணியர்கள்.. அடுத்தடுத்து அறிவிப்பு

    தமிழகத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், இப்போதே கொரோனா பரவலுக்கு எதிராக தமிழகத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிவிட்டார். தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கும் முன்பே சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து, கொரோனா பரவல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டுவிட்டார்.

    இந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முடிவில் இருக்கிறார்.

    கோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்?கோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்?

    எப்படி

    எப்படி

    தமிழகத்தில் மீண்டும் ஒரு முழு லாக்டவுனை கொண்டு வரும் முடிவில் ஸ்டாலின் இல்லை என்றும் கூறப்படுகிறது. மீண்டும் ஒரு லாக்டவுன் கொண்டு வரப்பட்டால், ஏற்கனவே பெரிய கடனில் இருக்கும் தமிழகம் இன்னும் மிக மோசமான சரிவை சந்திக்கும். இதனால் கட்டுப்பாடுகளை மட்டும் அதிகரித்து ஸ்மார்ட் லாக்டவுனை கொண்டு வரும் திட்டத்தில் ஸ்டாலின் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

    அலுவலகங்கள்

    அலுவலகங்கள்

    அதாவது உற்பத்தி தொழிற்சாலைகளை எப்போதும் இயங்க அனுமதிப்பது, வீட்டில் இருந்து வேலை பார்க்க வசதி உள்ள நிறுவனங்களை அதை தொடர செய்வது, நிறுவனங்கள், தொழில்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை விதிப்பது என்று ஸ்மார்ட் கட்டுப்பாடுகளை கொண்டு வரும் முடிவில் ஸ்டாலின் இருப்பதாக தெரிகிறது.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    தமிழகத்தில் நேற்று முதல்நாள் கடைகளை இயக்கம் நேரத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல் போக்குவரத்து சாதனங்களில் 50% கூட்டத்தை மட்டுமே அனுமதித்து உத்தரவிடப்பட்டது. இது ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக்கு பின் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆகும். இதேபோன்ற மேலும் சில கட்டுப்பாடுகளை ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின் கொண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.

    முக்கியம்

    முக்கியம்

    மிக முக்கியமாக தமிழகத்தில் டாஸ்மாக் செயல்படும் நேரம் குறைக்கப்படும். தற்போது டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. இந்த நேரத்தை குறைக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது. 6 மணி நேரமாக இதை குறைக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பதாக தெரிகிறது.

     எத்தனை மணி நேரம்

    எத்தனை மணி நேரம்

    காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இனி இயங்க போவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. பொருளாதார ரீதியாக தமிழக அரசுக்கு இது இழப்பை ஏற்படுத்தும். அதிலும் புதிதாக பதவி ஏற்கும் அரசுக்கு இது கண்டிப்பாக பெரிய ரிஸ்க்தான். ஆனாலும் அரசு துணிந்து இந்த முடிவை எடுக்க போவதாக தெரிகிறது.

    வருமானம்

    வருமானம்

    வருமான ரீதியாக இழப்பு வந்தாலும், இப்போது இரண்டாம் அலையை கட்டுப்படுத்த வேண்டும். அதுவே தேவை. அதிலும் டாஸ்மாக் செல்பவர்களுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு அதிகம். அதே சமயம் மொத்தமாக திடீரென டாஸ்மாக்கை மூடினாலும், அது குடிப்பவர்களுக்கு வேறு ரீதியான உடல் பிரச்னையை தரும் என்பதால் டாஸ்மாக் நேரத்தை தமிழக அரசு கண்டிப்பாக விரைவில் குறைக்கும் என்று தகவல்கள் வருகின்றன.

    English summary
    TN CM elect M K Stalin may reduce the timings of Tasmac amid Covid 19 case rising in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X