மருத்துவ குழுவின் "அந்த" அறிவுரை.. வேகமாக முடிவு எடுத்த முதல்வர்.. சென்னை லாக்டவுனுக்கு காரணம் என்ன?
சென்னை: இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்திய பின் சென்னையில் முழு லாக்டவுன் பிறப்பிக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும். சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

ஆலோசனை செய்தார்
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்த போதே முழு லாக்டவுன் வருமா என்று பேச்சு எழுந்தது. அதாவது தினமும் ஆயிரம் கேஸ்கள் வருகிறது. கண்டிப்பாக முழு லாக்டவுன் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கூறப்பட்டது. சென்னையில் முழு லாக்டவுன் வரும் என்று கூட இரண்டு நாட்களுக்கு முன் வதந்தி பரவியது.

மறுப்பு தெரிவித்தார்
ஆனால் அப்போது தமிழக அரசு அந்த முடிவில் இல்லை. ஏனென்றால் சென்னையை விட மோசமாக இருக்கும் டெல்லியில் எல்லாம் இயங்குகிறது. மும்பையில் இயல்புநிலை திரும்ப தொடங்கி உள்ளது. ஆனால் சென்னையில் மட்டும் ஏன் லாக் டவுன் கொண்டு வர வேண்டும் என்று அரசு நினைத்தது. இதனால் சென்னையில் லாக்டவுன் தொடர்பாக வெளியான செய்திகளை அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. முதல்வர் பழனிச்சாமி இதை நேரடியாக மறுத்தார்.

அறிவுரை
இந்த நிலையில்தான் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை செய்தது குறிப்பிடத்தக்கது. சென்னை தொடர்பாக இதில் விவாதிக்கப்பட்டது. சென்னையில் எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று ஆலோசனை செய்தார். இரண்டாவதாக சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் கொண்டு வர வேண்டுமா, லாக்டவுன் மட்டும்தான் தீர்வா என்று ஆலோசனை செய்தார்.

என்ன அறிவுரை
இதில் அறிவுரை வழங்கிய மருத்துவர்கள், சென்னையில் கேஸ்கள் வேகமாக அதிகரிக்கிறது. இன்னொரு லாக்டவுன் மட்டுமே சரியான தீர்வு. லாக்டவுனை கொண்டு வந்துவிட்டு டெஸ்ட்களை அதிகரிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை தீவிரமாக்க வேண்டும். அப்போதுதான் சென்னையை காப்பாற்ற முடியும். உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மருத்துவ குழு மிகவும் கண்டிப்பாக இந்த அறிவுரையை வழங்கி உள்ளனர்.

அமைச்சரவை ஆலோசனை
இது மட்டுமே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் என்றுகூறி உள்ளனர். அதோடு இன்னொரு பக்கம் சென்னையில் லாக்டவுன் கொண்டு வருவது குறித்து அமைச்சரவை உடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை செய்துள்ளார். மருத்துவ குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசனை செய்து இருக்கிறார். மருத்துவ குழுவின் பரிந்துரைக்கு அமைச்சரவையும் ஏற்றுக்கொண்டு உள்ளது.
செம முடிவு
இதையடுத்துதான் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழுஊரடங்கு பிறப்பிக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க 4 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் உடனே கொண்டு வரப்படவில்லை. 4 நாட்கள் கழித்து 19ம் தேதிதான் இந்த லாக்டவுன் அமலுக்கு வருகிறது என்பதால் மக்கள் உடனே வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை.












Click it and Unblock the Notifications