“முதல்வர் விஜய் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணம்” - தமிழக அரசு அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை சென்னை திரும்பினார். "தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது." என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036 ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள முதல்வர் விஜய், அதன் ஒரு பகுதியாக தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல்முறையாக லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Vijay london tvk

லண்டனில் தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகள், உலகளாவிய திறன் மையங்கள், ஆய்வு மேம்பாட்டு வசதிகளை நிறுவுவதற்காக, அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ரூ. 15,300 கோடியிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

அதிகபட்சமாக, சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், தனது பிரிட்டன் மற்றும் ஐரோப்பா கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளது.

இதுதவிர, ஏர்ன்ஸ்ட் - யங் நிறுவனம், ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி, பிரிட்டனைச் சேர்ந்த வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த தொழில் முதலீடுகள் மூலம் ஏறத்தாழ 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் விஜய் முன்னிலையில் நேற்று லண்டனில் தமிழக அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனத்திற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.

சர்வதேச வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் நிறுவவதற்கான விருப்ப கடிதத்தை வழங்கி உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், விருப்ப கடிதம் சேர்த்து 15,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கப்பட்டுள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும்.

சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய முதலீடு செய்கிறது. இதனால் 7 ஆயிரம் வேலைவாய்ப்பு கிடைக்கும். வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திருவள்ளூரில் மின்மாற்றி உற்பத்தி பணிகளில் 300 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதனால் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சிக்மா டெக்னாலஜி குழுமம் மற்றும் எர்ன்ஸ்ட் யங் நிறுவனங்களுடன் திறன் மையங்களை விரிவுபடுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன. இதன் வாயிலாக 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஐரோப்பாவின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவில் மேற்கொள்ள உள்ள 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு தமிழகத்தை விரும்பத்தக்க இடமாக கருதுவதாக விருப்ப கடிதம் அளித்துள்ளது.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் தீரஜ் ஹிந்துஜா, பினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பிரகாஷ் சாப்ரியா, இயக்குனர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா, ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினர். தமிழகத்தில் ஹிந்துஜா குழுமம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்து விஜய்யிடம் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+