திடீர் கரகோசம்.. கையசைத்து வரவேற்ற ஸ்டாலின்! செஸ் ஒலிம்பியாட்டில் மாஸ் எண்ட்ரி கொடுத்த இந்தியா
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் அணிவகுத்து சென்ற இந்திய வீரர்களை கண்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையசைத்து வரவேற்றார்.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் சென்னையில் இன்று தொடங்கி இருக்கிறது. மாமல்லபுரத்தில் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.
186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்கின்றனர்.

தமிழ்நாடு அரசு
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக நடந்து முடிந்துள்ளன. நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை தமிழ்நாடு அரசு பிரபலப்படுத்தியும் வருகிறது.

ஏற்பாடுகள்
இந்த போட்டிக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான சிறப்பான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து இருக்கிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகை தந்து இருக்கிறார்.

பிரபலங்கள் பங்கேற்பு
பிரதமரின் வருகை சற்று தாமதமானாலும் குறித்த நேரத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா தொடங்கி இருக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யனாதன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்க மற்ற தமிழ்நாடு அமைச்சர்களுக்கு என தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் சினிமா பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய வீரர்களை வரவேற்ற ஸ்டாலின்
எப்போதும் விழாக்களில் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டு துண்டு அணிந்து விழாக்கோலத்தில் பங்கேற்றார். இதில் அணிவகுத்த 186 நாடுகளை சேர்ந்த வீரர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தன. ஆனால், இந்தியாவிலிருந்து மட்டும் பலர் இதில் கலந்துகொண்டனர். பிங்க் நிற உடையணிந்து அணிவகுத்த இந்திய வீரர்களை கண்டதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையசைத்து வரவேற்றார். அரங்கமும் கரகோசத்தால் நிரம்பியது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications