நீட் தேர்வுக்கு எதிரான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மசோதா- அப்படி என்ன அதில் இருக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கனவுகளை தகர்த்தது; நீட் தேர்வு மூலம் கல்வி தரம் மேம்படுகிறது என்பது போலியானது என தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்

    தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்த நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவின் முழு விவரம்:

    நாடு முழுவதும் அனைத்து மருத்துவ கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மருத்துவ மற்றும் முதுநிலை மருத்துவ அளவிலான சேர்க்கையானது பொது நுழைவுத் தேர்வில் - நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இருந்து வருகிறது. நீட் அடிப்படையிலான சேர்க்க முறையானது சமூக, பொருளாதார மற்றும் கூட்டாட்சி அரசு மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களில், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் அல்லது தமிழ்நாட்டின் பிற பிரிவினைச் சேர்ந்த மாணவர்கள் எவரையும் மோசமாக பாதித்துள்ளதா என ஓர் உயர்மட்டக் குழுவினால் ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக் குழுவானது அதன் அறிக்கையில் சலுகை குன்றிய சமூகப் பிரிவினரால் மருத்துவக் கல்வியை அடையும் கனவிற்கு இடையூறாக இருக்கையில் முக்கியமாக சமூகத்தில் இயலும் நிலையில் உள்ள மற்றும் பொருளாதார வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாக இருந்து, எம்.பி.பி.எஸ், உயர் மருத்துவ படிப்புகளில் உள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது குறைத்து மதிப்பிட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    ஏழை மாணவர்களுக்கு எதிரானது

    ஏழை மாணவர்களுக்கு எதிரானது

    மருத்துவக் கல்விக்காக போட்டியிட்டவர்களின் சமூக பொருளாதார மற்றும் பிற மக்கள் தொகை சார்நிலைக்கு தொடர்பான பல பரிமாணங்களின் பகுப்பாய்வு இந்த உண்மையை மெய்ப்பித்துள்ளது. குறிப்பாக மருத்துவக் கல்வியில் குறைந்த சமூக பொருளாதார மற்றும் பிற மக்கள் தொகை சார்நிலையினை கொண்டுள்ள சமூக மற்றும் பிற மக்கள் தொகை பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கைவிட்டுள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்ற, கிராமப்புற பின்னணியை கொண்டுள்ள அரசு பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக கொன்டுள்ளவர்கள் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் போன்ற சமூக ரீதியாகத் தாழ்த்தப்பட்ட பிரிவினர், பெரும்பாலும் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவினர் ஆவர். எனவே இப்பிரிவினருக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எதிரானது என குழுவானது முடிவு செய்கிறது. எம்.பி.பி.எஸ் மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு அதன் வரம்பெல்லையின் கீழ் உறுதி செய்வதாக தெரியவில்லை.

    பிளஸ் டூ 2மதிப்பெண்கள் போதும்

    பிளஸ் டூ 2மதிப்பெண்கள் போதும்

    ஒப்பிடுகையில் குறைந்த செயல் திறன் கொண்ட மாண்வர்கள் எம்.பி.பி.எஸ்-க்கு சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு இயலச் செய்துள்ளது, உரிமை கொடுத்துள்ளது என்பதை அறிக்கை முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே மாணவர்களின் தரம் மற்றும் தகுதியை நீட் தேர்வானது உறுதி செய்கிறதா? என்ற வினா நிராகரிக்கப்படுதல் வேண்டும். ஒப்பிடுகையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு முந்தைய கால கட்டத்தில் சேர்க்கைகள் வழங்கப்பட்ட்டதன் அடிப்படையான மேனிலை மதிப்பெண்கள் தரமான, தகுதிவாய்ந்த மாணவர்களின் நுழைவுத் தேர்வை உறுதி செய்வதாக கருதப்படுகிறது.

    2006 போல ஒரு சட்டம்

    2006 போல ஒரு சட்டம்

    இக் குழுவானது 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்கல்வி நிறுவனங்களின் சேர்க்கை சட்டத்தை போன்றதொரு சட்டத்தை மாநில அரசானது நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறலாம் என பரிந்துரை செய்துள்ளது. இது சமூக நீதியை உறுதி செய்யும். மருத்துவக் கல்விக்கான சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதில் இருந்து அனைத்து பாதிப்புக்குள்ளாகும் மாணவர் சமுதாயங்களையும் பாதுகாக்கும். நீட் தேர்வானது, சேர்க்கைக்கான ஒரு நடுநிலையான முறை அல்ல. மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் தமிழக மாணவர்களின் குறிப்பாக சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்களின் நம்பிக்கையையும் கனவுகளையும் நீட் தேர்வானது தகர்த்துள்ளது என கடந்த 4 ஆன்டுகளில் நீட் தேர்வின் அனுபவம் காண்பித்துள்ளது.

    அரசியல் சாசனத்துக்கு எதிரானது

    அரசியல் சாசனத்துக்கு எதிரானது

    தகுதித் தேர்வு தவிர மாணவர்கள் கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வானது, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பைத் தவிர பிற சிறப்பு பயிற்சியை பெறக்கூடிய சமூகத்தின் பொருளாதார வளமிகு, அதிக சலுகை பெற்ற வகுப்பினரை ஆதரித்து சமத்துவமின்யை வளர்க்கிறது. மருத்துவம், பல் மருத்துவ கல்வியில் இருந்து சலுகை குன்றிய சமூகப் பிரிவுகளை மெய்நிகராகத் தடுக்கிறது. இது அரசியல் அமைப்பின் சாராம்சமான சமத்துவ கூறின் நோக்கத்துக்கு எதிராக உள்ளது. சமூகத்தில் சலுகை குன்றிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி உரிமையை மறுக்கிறது.

    கிராமங்களின் மருத்துவ கட்டமைப்பு

    கிராமங்களின் மருத்துவ கட்டமைப்பு

    மேலும் இளநிலை பட்டப்படிக்குப் பிறகு வசதியான வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்வதில்லை. அவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் முதுநிலை பட்டப் படிப்பைத் தொடர்கின்றனர். இதனால் மாநிலத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நீட் தேர்வானது மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என பரிந்துரைப்பது போலியானது. தேசிய மருத்துவ ஆணையத்தால் வகுத்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தாலும் கல்வித் திட்டத்தாலும் பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பு பல்கலைக் கழகம் நடத்தும் தேர்வை பின்பற்றுவதனாலும் இளநிலை படிப்பின் போது மருத்துவ கல்வியின் தரமானது மேம்படுகிறது. பல்கலைக் கழகங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுவதில்லை. எனவே மருத்துவக் கல்வியின் தரமானது சேர்க்கையின் போது மட்டுமே பேணப்படுவது இல்லை.

    மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை

    மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை

    மேலும் 2017-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே உயர்ந்தபட்ச எண்ணிக்கையிலான மருத்துவம், பல் மருத்துவ கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாக இருந்தது. இந்த நிறுவனங்களில் பட்டம் பெறுகின்ற மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவராக இருந்தனர். எனவே உயர்நிலைப் பாடத்திட்டம் போதுமான தரத்தில் உள்ளன. மதிப்பெண்கள் நெறிப்படுத்துதல் முறை மூலம் சரி செய்யப்பட்டால் முறையான, நியாயமான, நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும். மருத்துவக் கல்வி படிப்புகளுக்கான சேர்க்கையை இந்திய அரசியல் அமைப்பின் 7-வது அட்டவணையில் 3-வது பட்டியலில் 25-வது உள்ளீட்டில் காணலாம். எனவே மாநில அரசானது அதை முறைப்படுத்த தகுதியுடையதாகிறது. உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை கவனமாக பரிசீலித்த பின்பு சமூக நீதியை உறுதி செய்யவும் சமத்துவம், சமவாய்ப்பை நிலை நிறுத்தவும், பாதிப்புக்குள்ளாகக் கூடிய அனைத்து மாணவர் சமுதாயத்தினரையும் பாகுபாடு காட்டுவதில் இருந்து பாதுகாக்கவும் அவர்களை மருத்துவம், பல் மருத்துவ கல்விக்கான பெருந்திரள் நிலைக்கு கொண்டு வந்து அதன்படி மாநிலத்தில் முக்கியமாக கிராமப் பகுதிகளில் வலுவான பொதுசுகாதார நலனை உறுதி செய்யவும் மருத்துவ இளநிலை பட்ட படிப்புகளில் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வையை விட்டுவிடவும் நெறிப்படுத்துதல் முறை மூலம் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கூறப்பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையை வழங்கவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசானது முடிவு செய்துள்ளது. இவ்வாறு தமிழ அரசின் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+