ஆட்சியில் இருப்பது என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை- திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் வார்னிங்
சென்னை: ஆட்சியில் இருப்பது என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை என திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியில் இருந்து 3000 பேர் இன்று திமுகவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர். அனைவரையும் வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழருக்காக குரல் கொடுப்பது திமுகதான். திமுகதான் விடிவெள்ளி, உற்ற தோழன், நம்மை காக்கும் பேரியக்கம் என்ற நம்பிக்கையோடு அனைவரும் இணைய வந்துள்ளீர்கள்.

திமுக 73 ஆண்டுகள்
திமுகவின் வரலாறு என்பது 73 ஆண்டுகளைக் கொண்டது. இன்னும் 2 ஆண்டுகளில் திமுக 75-வது ஆண்டை கொண்டாட இருக்கிறது. 1949-ம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திமுக தொடங்கப்பட்டது உடனே தேர்தலை சந்திக்கவில்லை. 1957-ல் திமுக முதன் முதலாக தேர்தல் களத்தில் இறங்கியது. அப்போது 15 இடங்களில் திமுக வென்றது. 1962-ம் ஆண்டு தேர்தலில் திமுக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று எதிர்க்கட்சியானது.

உங்களில் ஒருவன் ஆட்சி
1967-ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றோம். 1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தோம். 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையாருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் நெருக்கடி நிலைமை அமல்படுத்தப்பட்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1989-ல் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தது. 1991-ல் தோல்வி; 1996-ல் வென்று ஆட்சி அமைத்தோம்; 2001-ல் தோல்வி; 2006-ல் வென்று ஆட்சி அமைத்தோம். 2011-க்குப் பிறகு இப்போது கடந்த தேர்தலில் வென்று உங்களில் ஒருவனாக இருக்கக் கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நடைபெறுகிறது.

சொகுசுக்கு அல்ல
ஆட்சி என்பது சொகுசு வாழ்க்கைக்கான பதவி இல்லை; ஆட்சியில் இருந்தால் மக்களுக்கு தொண்டாற்றலாம். ஆட்சியில் இல்லை எனில் மக்களுக்குப் போராட வாதாடலாம் என்பதுதான் திமுக. தற்போதைய ஆட்சியில் அரசு பணிகள் தமிழருக்குதான் என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு தகுதி தேர்வாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் அன்னை தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது.
தமிழ் மொழியில் மாவ்ட்ட அரசு ஊழியர்கள் கையெழுத்து போட்டாகும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
Recommended Video

இலங்கை விவகாரம்
இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தொப்புள்கொடி உறவுகள், ஈழத் தமிழர்களுக்கு பேருதவியாக சலுகைகள் அறிவித்துள்ளோம். ஈழத் தமிழருக்கு ரூ317 கோடி சமூக பாதுகாப்பு திட்டங்கள் அறிவித்துள்ளோம். இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக 13 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைத்துள்ளோ. அத்துடன் இலங்கை தற்போது மோசமான நெருக்கடியில் சிக்கி அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது இலங்கை மக்களுக்கு உதவி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 10 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போமோ அதை நாம் ஓராண்டில் செய்திருக்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications