தம்பி சூர்யாவை பாராட்டுறேன்.. வாழ்த்திய ஸ்டாலின்! மீண்டும் சந்துரு, ஞானவேலு.. இணையும் ஜெய்பீம் டீம்
சென்னை: ஏழை, எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் நடிகர்
சூர்யாவின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் "சத்தியதேவ்" அவர்களின் நினைவாக சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் "சத்தியதேவ் லா அகாடமி"யை (Sathyadev Law Academy) தொடங்கி வைத்து, இலட்சினையை வெளியிட்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்தியாவில் சட்டத்தொழில் புரிவது சாதாரண மக்களுக்கு எளிதான காரியம் அல்ல. அப்படிப்பட்ட வழக்கறிஞர் தொழிலில் குறிப்பிட்ட ஒரு சிலரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். "வழக்கறிஞர் சட்டம்" 1961-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பின்னரே வழக்கறிஞர் தொழில் ஒருமுகப்படுத்தப்பட்டு சட்டப்படிப்பு பரவலாக்கப்பட்டது.

சட்டக்கல்லூரி மாணவர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு சமூக நீதி ஏற்பட்ட பின்னரே. பல்வேறு சமூகங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் இத்தொழிலுக்கு வரத்தொடங்கினர். அதிக அளவிலான சட்டக்கல்லூரிகள், சட்டப் பல்கலைக்கழகங்கள் வந்த பிறகும், சட்டப்படிப்பு சாதாரண குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு சவாலாகவே உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு "சத்தியதேவ் லா அகாடமி", அரசு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அகாடமியில் சட்ட நிபுணர்கள்/சட்ட ஆசிரியர்களைக் கொண்டு சட்டக்கல்லூரி பாடத்திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடங்களைக் காணொலியில் பதிவு செய்யப்பட்டு "யூ-டியூப்" வலைதளத்தில் பதிவேற்றப்படும்.
மாணவர்கள் அவற்றை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறலாம். பாடத்திட்ட காணொலி தயாரிப்பதற்கான நிதியை ஜெய்பீம் படத்தயாரிப்பாளர், நடிகர் சூர்யா அவர்களின் "2D எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் வழங்கிட உள்ளது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் நடிகர் சூர்யா, ஜெய்பீம் திரைப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூக நீதி அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய… pic.twitter.com/8jHf1SjJFI
— M.K.Stalin (@mkstalin) July 16, 2023
எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்யதேவ் சட்ட அகாடமியைத் தொடங்கி வைத்தேன். இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யா அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.
சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது! எனவே, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன். நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, ஜெய்பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் திரு.ஞானவேல் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்!" என்று பதிவிட்டு இருந்தார்.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.. நாங்க ஏமாந்துட்டோம்! எவ வேலு -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications