ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு- நிலுவை மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தல்!
சென்னை: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழக அரசின் நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் தொடருகின்றன. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா உள்ளிட்டவைகளை நீண்டகாலம் கிடப்பில் போட்டு வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கொடுத்த நெருக்கடியால் நீட் மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் டெல்லியில் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு கொள்கை ரீதியாக ஆளுநர் பதவிக்கு எதிரானது.

இந்த கொள்கையை வெளிப்படுத்தும் வகையில், பல்கலைக் கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்தது பறித்தது தமிழக அரசு. தற்போது புதிய கல்வி கொள்கை தொடர்பாக தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்துள்ளன.
சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில், புதிய கல்விக்கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுத்தேர்வு கொண்டு வந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகிவிடும். இங்கு சிலர் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நன்கு படித்துப் புரிந்துகொண்ட பிறகுதான் அதுபற்றி பேசி வருகிறோம் என வெளிப்படையாகவே ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் பொன்முடி விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் கிண்டி ராஜ்பவனில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தெரிகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications