Madras Day: சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! பழைய போட்டோக்களை பகிர்ந்த தெற்கு ரயில்வே!
சென்னை: சென்னை பெருநகர மக்களுக்கு Madras Day வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Madras Day-வை முன்னிட்டு எழும்பூர், ராயபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பழைய படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறது தெற்கு ரயில்வே.
Recommended Video
சென்னை எனும் பெருநகருக்கு இன்று பிறந்த நாள்.. சென்னையில் ஆங்கிலேயர்கள் இன்றைய செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை 382 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றுதான் வாங்கினர். அதனால்தான் சென்னைக்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
சென்னை மாநகராட்சி, Madras Day-வை ஒரு வாரம் கொண்டாடுகிறது. இதற்கான பல்வேறு ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி செய்திருக்கிறது. சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இதனிடையே சென்னை மாநகர மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் Madras Day வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சீர்மிகு, சிங்கார - வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது. தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்குப் பங்களித்தது திமுக அரசு; இனியும் தொடரும்.சென்னை மாநகர மக்களுக்கு #MadrasDay வாழ்த்துகள்!. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி ட்வீட்
திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சென்னை தமிழகத்தின் தலைநகரமாக மட்டுமல்லாமல் கலை நகரமாகவும் கலாச்சார நகரமாகவும் திகழ்கிறது. சென்னையை வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 382-வது சென்னை தின வாழ்த்துகள். சென்னை வரலாறு குறித்தும் கலாச்சார சிறப்பு குறித்தும் அழுத்தமாக பதிவு செய்த திரு.சு. முத்தையா அவர்கள் தான் முதன்முதலில் சென்னை தின கொண்டாட்டத்தை முன்னெடுக்கச் செய்தவர் என்பதை இத்தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன். இவ்வாறு கனிமொழி எம்.பி. பதிவிட்டுள்ளார்.

எஸ்.பி. வேலுமணி வாழ்த்து
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து: கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித்தரும் "சென்னை நகரம்" தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. உழைப்பிற்கு அடையாளமாக பெயர் பெற்ற சென்னையின் வரலாற்றை பேணிக்காப்போம்! சென்னையின் பெருமையை போற்றுவோம்! அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகள்! இவ்வாறு வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வே புகைப்படங்கள்
மேலும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தமது ட்விட்டர் பக்கத்தில் சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் மற்றும் பழமைவாய்ந்த ராயபுரம் ஆகிய ரயில் நிலையங்களின் படங்களை பகிர்ந்துள்ளது. சென்னை மக்களுக்கு Madras Day வாழ்த்துகள் சொல்லும் விதமாக இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications