Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களின் அன்பை பெற்ற தலைவர் வசந்த குமார்.. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எம்பி வசந்தகுமார் மறைவு ஈடு செய்ய முடியாதது என்று தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். எம்பி வசந்த் குமார் மறைவு வேதனை அளிக்கிறது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி மற்றும் வியாபாரியுமான எம்பி வசந்த குமார் இன்று காலமானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கொரோனா காரணமாக இன்று மரணம் அடைந்தார். சென்னையில் கொரோனாவிற்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

TN CM Palanisamy condolences for MP Vasanthakumar demise

வசந்தகுமார் மறைவிற்கு தற்போது நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தற்போது எம்பி வசந்த குமார் மறைவிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட Congress MP Vasantha Kumar மரணம்

    அதில், எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது.

    வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பெரிய இழப்பு. மக்களின் அன்பை பொதுவாழ்வில் ஈடுபட்டு பெற்றவர் வசந்தகுமார். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது, என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    TN CM Palanisamy condolences for MP Vasanthakumar demise

    துணை முதல்வர் ஓ . பன்னீர்செல்வம் தனது இரங்கல் டிவிட்டில், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான திரு.எச்.வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    திரு.எச்.வசந்தகுமார் இழப்பால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+