தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் டேஞ்சர்தான்.. மனம் விட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் எப்போதும் டேஞ்சர்தான்.. இந்த விஷயத்தில் நான் கருணாநிதியைவிட ஒரு படிமேல்தான் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமைதான் என்றும், நம்ம ஆட்சியில் உள்ள சில குறைகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைப் போலவே இன்றும் காலையிலேயே சோழிங்கநல்லூர் தொகுதியில் சாலையில் நடந்து சென்றபடி முதல்வர் ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் காலை, மாலை, இரவு என முழு நேரமும் அதிரடி பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றைப் போலவே இன்றும் காலையில் சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். சாலையில் நடந்த சென்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஸ்டாலின் பொதுமக்களிடம் கலந்துரையாடவும் செய்தார். முன்னதாக வீடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார். தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுக்க நான் மக்களை சந்தித்தாலும், சில விஷயங்களை இந்த வீடியோ மூலம் மனம் விட்டு பேசுகிறேன்.. கடந்த 2021 தேர்தலில் சில பேர் ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் கருணாநிதி என சொன்னாங்க.. கலைஞருடன் என்னை எப்போதும் ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பா என்று கூப்பிட்டதை விட, தலைவர் என்று தான் அதிகம் அழைத்து இருக்கிறேன்.
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 21, 2026
காணுங்கள்…#வெல்வோம்_ஒன்றாக ! pic.twitter.com/wu9Kek7jAD
தலைவர் கலைஞரை விட நான் ஒரு படி மேலே இருக்கிறேன் என சொல்கிறார்கள்.. அப்படி என்றால் நல்லது தானே.. பெருமை தான்.. மக்களுக்கு என்ன செய்திருக்கிறேன் என்று கேட்டால் நாள் கணக்காக பேச முடியும். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பதே நமது முதன்மையான குறிக்கோள். கருவில் இருக்கிற குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை என எல்லாருக்குமான திட்டங்களை கொடுத்து இருக்கிறேன்.
கல்வி ஒன்று தான் உங்க கிட்ட இருந்து யாராலயும் திருட முடியாது. இதனால் கல்விக்காக மட்டும் நான் முதல்வன் திட்டம் உள்பட பல திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். எந்த துறையினை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாடு டாப்பில் இருக்கும். பொருளாதார வளர்ச்சியும் இரட்டை இலக்கத்தை கொடுத்துள்ளோம். குறைகள் இருந்தாலும் அதனை காதுகுடுத்து கேட்டு அதனை சரி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதோட ரிசல்டை இன்னும் கொஞ்ச நாளில் பார்க்கலாம்..












Click it and Unblock the Notifications