முதல்வர் விஜய் - ராகுல் காந்தி ஒரே காரில் பயணம்! பாலவாக்கம் கஃபேயில் காபி குடித்தபடி ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை தந்த நிலையில், முதல்வர் விஜய்யை நீலாங்கரை இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவருக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. பின்னர் இரு தலைவர்களும் தனியாக 1 மணி நேரம் ஆலோசனை நடத்திய நிலையில், ஒரே காரில் ஒன்றாக வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே வந்தனர். பாலாவாக்கம் உள்ள கஃபேவிற்கு சென்ற இரு தலைவர்களும் அங்கு காஃபி குடித்தபடியே ஆலோசனை செய்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று சென்னை வந்தார். சென்னைக்கு பிற்பகல் 12.30 மணியளவில் வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ராகுல் காந்தி, நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் இல்லத்திற்கு சென்றார்.

Vijay and Rahul Gandhi traveling in the same car in Chennai

ஒரே காரில் பயணம்

முதல்வர் விஜய் இல்லத்தில் ராகுல் காந்திக்கு மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது. இதன்பிறகு இரு தலைவர்களும் தனியே சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் யாரும் இன்றி இருவரும் தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்ப்டும் நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்புக்கு பிறகு ராகுல் காந்தியும் முதல்வர் விஜய்யும் ஒரே காரில் பயணம் செய்தனர். முதல்வர் விஜய்யின் காரில் ராகுல் காந்தி ஏறிக்கொள்ள இருவரும் ஒன்றாக பயணித்தனர். காரின் பின் இருக்கையில் இருவரும் ஆலோசித்தபடி சென்ற காட்சிகள் வெளியாகின.

காஃபி குடிக்க திட்டம்?

வழிபாட்டு தலத்திற்கு ராகுலும் விஜய்யும் ஒன்றாக செல்ல இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனினும், இது பற்றி உறுதியான தகவல் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் பாலவாக்கத்தில் உள்ள கஃபேக்கு சென்ற ராகுல் காந்தியும் விஜய்யும் காஃபி குடித்தப்படியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கஃபே கிரிக்கெட் ஜாம்பவர் எம்.எஸ் தோனிக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது.

மாணவர்களை சந்திக்கிறார் ராகுல்

ராகுல் காந்தி இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடைபெறும் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, மொழி, கலாச்சாரம்,, உள்ளிட்டவை குறித்து மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய்யும் ராகுலும் ஒன்றாக செல்வதால், விஜய்யும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாரா? என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+