ஒரு ரூம் போதாதா.. 5 ரூம் போட்டுக் கொடுத்த "தல".. டெல்லிக்குப் பறந்த வீடியோ.. கலகலக்கும் தமிழக காங்.!
சென்னை: பீகார் தேர்தலை முன்வைத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி மீதான விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்படுகின்றன. இந்த களேபரங்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் கண்ணும் கருத்துமாக உட்கட்சி விவகாரங்களை டெல்லிக்கு போட்டுக் கொடுத்து வருகின்றனர்.
பீகாரில் ஆர்ஜேடி ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காரணமே காங்கிரஸுக்கு அதிக இடங்களை கொடுத்ததுதான் என்கிற விமர்சனம் பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஆர்ஜேடியை போல தமிழகத்தில் திமுகவும் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் ஆட்சி கனவு தகர்ந்து போகும் என அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களோ இதைபற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாதவர்களாகவே தங்களுடைய சிலபல இலக்குகளை நிறைவேற்றுவதில் படுதீவிரமாக இருக்கின்றனர்.

சென்னையில் தினேஷ் குண்டுராவ்
அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி பெங்களூரு சென்று தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தார். அவரது சென்னை வருகையின் போதுதான் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில், காங்கிரஸில் இணைந்தார்.

முட்டுக்கட்டை
தினேஷ் குண்டுராவை சென்னைக்கு கே.எஸ். அழகிரி வரவழைத்ததே பல்வேறு கட்சி நியமனங்கள் தொடர்பான ஒப்புதலைப் பெறுவதற்குதான். கே.எஸ். அழகிரியின் இந்த முயற்சிகளுக்கு தினேஷ் குண்டுராவ் தரப்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. ஆனால் சில மேலிட பிரமுகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். கே.எஸ் அழகிரி தரப்பு என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறது.

பிரமுகருக்கு 5 ரூம்கள்
இந்த நிலையில் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட காங். மேலிட பிரமுகர்களில் ஒருவருக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 5 அறைகள் புக் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஒருவர்தானே வந்திருக்கிறார்.. அவருக்கு ஏன் 5 ரூம்கள்? இந்த 5 ரூம்களுக்கும் காங்கிரஸ் கமிட்டி ஏன் செலவு செய்யனும்? என படுதீவிரமாக அலசி சிலபல வீடியோக்கள் எடுத்திருக்கிறதாம் காங். கோஷ்டி.

டெல்லிக்கு பறந்த வீடியோ புகார்
அப்போதுதான் அந்த மேலிட பிரமுகர் ஒவ்வொரு சொகுசு வேலைக்கும் ஒரு அறையை பயன்படுத்துவதற்குதான் இந்த 5 ரூம்கள் புக் செய்யப்பட்ட தகவலும் வெளியானதாம். அல்வா மாதிரி கிடைத்த தகவலை ஆதாரங்களுடன் அப்படியே வீடியோ செய்திகளுடன் டெல்லிக்கு பாஸ் செய்துவிட்டதாம் எதிர்கோஷ்டி. ஜெயிக்க வழியை பாருங்கன்னு சொன்னா ஜோலியில் ஜொலிக்க வழியை பார்க்கிறாங்களே என தலையால் அடித்து கொள்கின்றனர் காங்கிரஸ் சீனியர்கள்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications