”காங்கிரஸ் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்” ராஜகண்ணப்பன் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
சென்னை: திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் வரட்டும்.. வராவிட்டால் போகட்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருந்த நிலையில் அவரது கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ஒரு ஒரு கட்சிகளும் மக்களுக்காக தான் போராடி வருகிறது அதற்கு பிறகு தான் கூட்டணி, தேர்தல் எல்லாம் எனவும் பதில் அளித்தார்.
திமுக காங்கிரஸ் இடையே கூட்டணி அமைந்தாலும், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்து 70 நாட்களுக்கும் மேலாக காத்திருந்து வருகிறது. ஆனால் திமுக வரும் 22 ஆம் தேதிக்கு பிறகே குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளது.

கூட்டணிக்கு வந்தால் வரட்டும்
தொகுதி பங்கீடை முடித்தால் அடுத்தக் கட்ட பிரசாரங்கள், தலைவர்களை தமிழகம் அழைத்து பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க செய்ய முடியும் என்றும் இதனாலேயே காங்கிரஸ் அவசரப்படுத்துவதாக அக்கட்சியில் செல்வப்பெருந்தகை பேசி வந்தார். மேலும் ஆட்சியில் பங்கு என்று கேட்டு வந்த காங்கிரசுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதனால் திமுக காங்கிரஸ் இடையேயான சலசலைப்பு ஓய்ந்துவிடும் என நினைத்த நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சியா ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்று கூறிவிட்டார். இதற்கிடையே திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வந்தால் வரட்டும், வரவில்லை என்றால் போகட்டும் என தடாலடியாக கூறிவிட்டார்.
செல்வப்பெருந்தகை பேட்டி
அவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கூறியதாவது:-
ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடக்கும். தொழிலாளர்கள் நலன்கள், உரிமைகள் எப்போது எல்லாம் பாதிக்கப்படுகிறதோ அப்போது எல்லாம் காங்கிரஸ் பேரியக்கமும், கம்யூனிஸ்டு கட்சிகளும் தோழமை கட்சிகளும் தொடர்ந்து போராடும்.
திரும்ப பெறும் வரை போராட்டம் தான்
இந்த போராட்டமானது தொடரும். சட்டங்களை திரும்பப் பெறும் வரை, தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டு கொடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.. வேளாண்மை திருத்த சட்டம் என்று ஒரு கருப்பு சட்டத்தை நிறைவேற்றினார்கள். பின்னர் 3 மாதமாக நடந்த போராட்டத்தை அடுத்து அதனை திரும்பப் பெற்றனர்.
மக்களுக்கு எதிராக என்னென்ன சட்டங்களை கொண்டு வரமுடியுமோ அதை எல்லாம் பாஜக கொண்டு வருகிறது. இதற்காக தான் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். டொனால்டு டிரம்ப் சொல்வதற்காக கையெழுத்து போடக்கூடாது..
ராஜகண்ணப்பனுக்கு செல்வப்பெருந்தகை பதில்
சத்தியமூர்த்தி பவனில் இருந்து கூட்டணி குறித்து பேசலாம்.. இப்போது போராட்டக் களத்தில் இருக்கிறோம். ஒரு ஒரு கட்சிகளும் மக்களுக்காக தான் போராடி வருகிறது. அதற்கு பிறகு தான் கூட்டணி.. அதற்கு பிறகு தான் தேர்தல் எல்லாம்.." என்று கூறினார்.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூட்டணிக்கு வந்தால் வரட்டும், வரலன்னா போகட்டும் என்று கூறியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "அவர் சொல்வதை எல்லாம் அவரது கருத்தை எல்லாம் ஏன் பொருட்படுத்துகின்றீர்கள்" என்றார்.
ஸ்டாலின் கூறுகையில், "கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஒற்றுமையாக இருங்கள்.. ஒவ்வொரு தொகுதியிலும் 234 தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என நினைத்து தேர்தல் பணிகளை செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications