விஜய்க்கு பெரிய தலைவலியை கொடுத்த காங்கிரஸ் அமைச்சர்? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்குச் (TTDC) சொந்தமான விடுதியில், தமிழக காங்கிரஸின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொண்டு வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

TN Congress

ஆனால், இந்தக் கட்சி பயிற்சி முகாமிற்குப் பின்னால் நடந்துள்ள அதிகார அத்துமீறலும், அதனால் பொதுமக்கள் சந்தித்த அவதியும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்குக் கொடுக்கப்பட்ட 'அதிர்ச்சி'

மாமல்லபுரத்தில் உள்ள இந்த அரசு சுற்றுலா விடுதியானது, வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் எப்போதும் பிஸியாக இருக்கும் ஒரு இடமாகும். பல வாரங்களுக்கு முன்பே ஆன்லைனிலும் நேரடி முன்பதிவு மூலமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு அறைகளைப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பயிற்சி முகாமிற்காக 10 நாட்களுக்கு முழு விடுதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சரான காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், தனது துறை அதிகாரிகளிடம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். அமைச்சரின் கெடுபிடி தாங்க முடியாமல், அதிகாரிகளும் ஹோட்டல் நிர்வாகத்துடன் பேசி, ஏற்கனவே சுற்றுலாப் பயணிகள் புக் செய்திருந்த அனைத்து அறைகளையும் ஒரே அடியில் ரத்து செய்துள்ளனர்.

"தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களால் உங்களுடைய அறை முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது" என எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வந்த குறுஞ்செய்தியால், குடும்பத்தோடு மாமல்லபுரம் வந்து தங்குவதற்குத் திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர். அரசு விடுதியிலேயே ஆளும் கூட்டணி கட்சியின் ஆதிக்கத்திற்காக தங்களின் முன்பதிவு தூக்கியடிக்கப்பட்டதை அறிந்து அவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

விஜய்யின் கவனத்திற்குச் சென்ற விவகாரம்!

பொதுமக்களின் இந்த அதிருப்தியும், விடுதி அறைகள் ரத்து செய்யப்பட்ட விவகாரமும் தற்போதும் தமிழக முதல்வர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றுள்ளது. கூட்டணி கட்சிதானே என்று விட்டுவிட்டால், அது ஆட்சிக்கு கெட்ட பெயரை வாங்கித் தந்துவிடும் என்பதை உணர்ந்த விஜய், உடனடியாக இது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

"கூட்டணி கட்சியாக இருக்கிறார்கள் என்பதால் இதை அப்படியே விட்டுவிட முடியுமா? பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிட்டு, கட்சிப் பணிக்கு அரசுச் சொத்தைப் பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதில் அடுத்து என்ன முடிவு எடுப்பது?" என்று அதிகாரிகளிடம் அவர் கேட்டுள்ளார்.

அதிகாரிகள் கொடுத்த 'ஸ்கெட்ச்' ஆலோசனை!

அமைச்சரின் இந்த கெடுபிடியால்தான் பிரச்சினை உருவானது என்பதை உணர்ந்த உயரதிகாரிகள், இந்த விவகாரத்திலிருந்து அரசுக்கு எந்தக் கெட்ட பெயரும் வராமல் தப்பிப்பதற்கு ஒரு தீர்வை முன்வைத்துள்ளனர்.

"அமைச்சர் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிக்கு இலவசமாகவோ அல்லது சலுகை விலையிலோ விடுதியை ஒதுக்குவதுதான் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் அறைகளை ரத்து செய்தது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விடுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கும் 10 நாட்களுக்கான முழு வாடகைத் தொகையையும் காங்கிரஸ் கட்சியே அதிகாரப்பூர்வமாகக் கட்டிவிட வேண்டும். அப்படிக் கட்டிவிட்டால், அரசுப் பணத்திலோ அல்லது இலவசமாகவோ விடுதி பயன்படுத்தப்படவில்லை என்று கூறி இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்" என அதிகாரிகள் யோசனை சொல்லியிருக்கிறார்கள்.

கட்சித் தலைவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதாகக் கூறி, அரசு விடுதியை முடக்கி பொதுமக்களை வெளியே அனுப்பிய காங்கிரஸ் அமைச்சரின் இந்த செயல், தற்போது கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி முழு தொகையையும் செலுத்தி சர்ச்சையைத் தவிர்க்குமா அல்லது இந்த விவகாரம் மேலும் தீவிரமடையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+