ஜெம் வீரமணி மீதான புகாரை வீடியோ ஆதாரத்துடன் 2024லேயே போலீஸில் கொடுத்தேன்! காங்கிரஸ் நிர்வாகி பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெம் வீரமணி என்பவர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியிருப்பதாக எனக்கு வீடியோ ஆதாரம் கிடைத்தவுடனே கடந்த 2024 நவம்பரில் சென்னை காவல் துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு ரஞ்சன் குமார் பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக காங்கிரஸ் மாநில நிர்வாகி ரஞ்சன் குமார் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

TN congress Ranjan Kumar

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி, எழும்பூரில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மூத்த காவல் அதிகாரி அதிகாரி உதவி ஆணையர் கண்ணன் சந்தித்து வீரமணி, சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன்.

அத்துடன் வீரமணி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்கான ஸ்கிரீன்ஷாட்களையும் இணைந்திருந்தேன். வீரமணி மற்றும் சாந்தி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டே புகார் அளித்தேன்.

அப்போது சென்னை கமிஷனரிடம் ஆலோசனை செய்துவிட்டு சொல்கிறோம் என்றார். பின்னர் 10 நாட்கள் கழித்து சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் என்னை தொடர்பு கொண்டார்.

என்னை பொதுவெளியில் சந்தித்த அவர், புகார் குறித்த விவரங்களை கேட்டார், நானும் எனக்கு கிடைத்த ஆதாரங்களை அவரிடம் கொடுத்தேன். அவரும் வாங்கிக் கொண்டு சென்றார். பிறகு சில நாட்கள் கழித்து மகேஷ் குமார் எனது வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு , வீடியோ கிளிப்பிங்கை மீண்டும் அனுப்ப கேட்டார், நானும் டிசம்பர் முதல் வாரத்தில் அனுப்பினேன்.

மீண்டும் 15 நாட்கள் கழித்து என்னை மீண்டும் அவர் சந்தித்தார். அப்போது என்னிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் யாரையாவது தெரியுமா என கேட்டார். அப்போது நான் , எனக்கு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் தெரியாது. நான் அதிகாரப்பூர்வமாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். இதை வைத்து புகார் மீது நடவடிக்கை எடுங்கள் என்றேன்.

அதற்கு அவர் அப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது, நீங்கள் அனுப்பிய வீடியோவை உண்மைத்தன்மைக்காக அனுப்பியுள்ளேன் என்றார். பிறகு மீண்டும் சில நாட்கள் கழித்து என்னை போனில் அழைத்தார். பெண் உதவி ஆணையரை சந்திக்க வருமாறு என்னை அழைத்தார். அதன் பேரில் பழைய கமிஷனர் அலுவலகத்திற்கு நான் சென்றேன். அப்போது அவரும் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அழைத்து வருமாறு கேட்டார். நான் அப்படி யாரும் எனக்கு தெரியாது என்றேன்.

நான் கொடுத்த புகாரை வைத்து சாந்தி வீட்டிற்கு ரெய்டு செல்லுங்கள். அவரை கைது செய்து விசாரித்தால் எல்லா உண்மைகளும் வெளியே வரும் என தெரிவித்தேன். 2 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் புகாரை கிடப்பிலேயே போட்டனர். நானும் என்னால் முடிந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்து பார்த்து அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் விட்டுவிட்டேன். மகேஷ் குமார் அடிக்கடி என்னை தொடர்பு கொண்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் என்னை தொடர்பு கொள்வதை நிறுத்திக் கொண்டார்.

தற்போது வீரமணி கைதானதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது வீரமணிதானா என தெரியவில்லை என யாரோ ஒரு தன்னார்வலர் 2025 ஆம் ஆண்டு பென் டிரைவ் கொடுத்ததாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் எனது புகாரில் நான் வீரமணி, சாந்தி பெயரை தெளிவாக குறிப்பிட்டேன்.

எனது புகாரை அவர்கள் எடுக்கவில்லை, 2024 லேயே புகார் அளித்தும் 2025 இல்தான் புகார் வந்தது என்கிறார்கள். இது எப்படி என தெரியவில்லை.

வீரமணி, சாந்தி கைதானதற்கு நான்தான் காரணம். இந்த புகாரால் எனக்கு எத்தனையோ அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. புகார் கொடுக்கும் வரை வீரமணி ஜெம் கிரானைட் அதிபர் என எனக்கு தெரியாது. சென்னை தேனாம்பேட்டையில் சாந்தியின் வீட்டில் அவர் வீரமணியின் வீடியோவை காண்பித்தார். அதை நான் என் செல்போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+