Udhayanidhi birthday: 8 கோடித் தமிழர்களில் மூன்றும் வாய்த்த ஒரே இளைஞர்.. உதயநிதிக்கு வைரமுத்து புகழாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளமையும் புன்னகையும், தாத்தாவின் வரலாறும், தந்தையின் உழைப்பும், இயக்கத்தின் கட்டமைப்பும் இற்றுவிடாத கொள்கையும் என எட்டுக்கோடித் தமிழர்களில் இந்த மூன்றும் பலமும் வாய்த்த ஒரே இளைஞர் நீங்கள்தான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு, உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான இன்று அடையாறு குறிஞ்சி இல்லத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

tn-deputy-chief-minister-udhayanidhi-stalin-celebrates-48th-birthday-vairamuthu-wishes-him

அவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாட உள்ளார். பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, பெரியார் நினைவிடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் நலத்திட்டங்களையும் வழங்கினர். உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

பிறந்த நாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் தனக்கே உரிய பாணியில் கவிதை நடையில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

துணை முதல்வரே!
முதல்வரின் ஒருமகனாகிய
திருமகனே!

பிரியமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உங்களுக்கு மூன்று பலங்கள்
மூன்றாம் பலம்
இளமையும் புன்னகையும்

இரண்டாம் பலம்
தாத்தாவின் வரலாறும்
தந்தையின் உழைப்பும்

முதல் பலம்
இயக்கத்தின் கட்டமைப்பும்
இற்றுவிடாத கொள்கையும்

எட்டுக்கோடித் தமிழர்களில்
இந்த மூன்றும் வாய்த்த
ஒரே இளைஞர் நீங்கள்தான்

மேற்சொன்ன மூன்றையும்
நேர்மையில் தீட்டிக்
கூர்மை செய்தால்
எட்டாத உயரம் எட்டலாம் நீங்கள்

வளர்பிறை வாழ்த்து" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+