Udhayanidhi: ”காதல் திருமணம்’ அவசரபட்டு வார்த்தையை விட்டுட்டோமோ.. கிருத்திகா பதிவுக்கு உதயநிதி ரீப்ளே
சென்னை: காதல் திருமணம் ரொம்ப கஷ்டம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருமண நிகழ்ச்சியில் பேசிய நிலையில், அவரது பேச்சை ஆமோதிப்பது போல ரொம்ப கஷ்டம் என்று மனைவி கிருத்திகா உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலினும் ரியாக்ட் செய்துள்ளார். நகைச்சுவையாக உதயநிதி அளித்து இருக்கும் பதில் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தொடர்ச்சியாக கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது துறை சார்ந்த பணிகள், கட்சி கூட்டம், கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்ச்சி என படு பிசியாக உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

கிருத்திகா உதயநிதி எக்ஸ் தள பதிவு
இந்த பரபரப்புக்கு நடுவே, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதியும் எக்ஸ் தளத்தில் போட்ட பதிவுகள் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இடையே வைரலாகி வருகிறது. அதாவது, காதல் திருமணம் ரொம்ப கஷ்டம் என உதயநிதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பேசினார். இதற்கு அவரது மனைவி கிருத்திகா உதயநிதி, உதயநிதியை கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.
இது குறித்த விவரம் வருமாறு:- சென்னையில் கலைவாணர் அரங்கில் 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், "இங்கு நிறைய பேர் 90ஸ் கிட்ஸ்கள் இருப்பார்கள் என நம்புகிறேன். நான் சொல்வது கீழே இல்லை, மேடையில் இருப்பார்கள்.
காதல் திருமணம் ரொம்ப கஷ்டம்
என் அருகே இருந்த தம்பதிகளுக்கு தாலி எடுத்துக் கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் கூடுதல் மகிழ்ச்சி இருந்தது. எனக்கு சந்தேகம் வந்து அவர்களிடம் கேட்டேன், "என்ன தம்பி காதல் திருமணமா இல்லை பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா என கேட்டேன். அதற்கு ஒருவர், "ஆமாண்ணே காதல் திருமணம்தான். இரண்டரை வருடம் லவ் செய்தேன்" என்றார்.
அனேகமாக இந்த மேடையில் நிறைய பேர் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என கூறிய உதயநிதி, காதல் திருமணம் என்பவர்கள் கை தூக்குங்க.. இங்க இருப்பவர்களில் 90 சதவீதம்.. இல்லை 100 சதவீதம் காதல் திருமணம்தான். கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால் எனக்கும் காதல் திருமணம்தான். காதல் திருமணம் ரொம்ப கஷ்டம்" என்றார்.
ப்ளோல வார்த்தையை விட்டுட்டோமோ
இது தொடர்பான பதிவை தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்த கிருத்திகா உதயநிதி, ரொம்ப கஷ்டம் என்று கையை தூக்கி ஆமோதிப்பது போலவும், ஸ்மைலி ஒன்றையும் ஷேர் செய்து இருந்தார். கிருத்திகாவின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் ட்விட் செய்துள்ள உதயநிதி ஸ்டாலின், "அவசரப்பட்டு ப்ளோல வார்த்தையை விட்டுட்டோமோ" என்று பதிவிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications